இன்றைய காலத்தில் அத்தியாவசியம் தொடங்கி ஆடம்பரம் வரை அனைத்திற்கும் பணம் மிக மிக தேவை. இந்த பணம் மற்றும் அதன் மதிப்பு நாட்டுக்கு நாடு மாறுபடும். சமீபத்தில் ஃபோர்ப்ஸ் நிறுவனம், “உலகின் வலிமையான டாப் 10 கரன்சிகள்’ என்று ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியல் ஒரு நாட்டின் ஒரு யூனிட் நாணயம் வைத்து எத்தனை பொருட்களை வாங்க முடியும்? ஒரு யூனிட் நாணயம் வைத்து எவ்வளவு பிற நாட்டு கரன்சிகளை வாங்க முடியும்? என்பதை பொறுத்து இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Forbes பட்டியல்…

இதோ அந்த டாப் 10 பட்டியல் (முறையே ஒன்றிலிருந்து பத்தாவது வரை)…

  1. குவைத் தினார் (KWD)

  2. பஹ்ரைன் தினார் (BHD)

  3. ஓமன் ரியால் (OMR)

  4. ஜோர்டான் தினார் (JOD)

  5. ஜிப்ரால்டர் பவுண்ட் (GIP)

  6. பிரிட்டிஷ் பவுண்ட் (GBP)

  7. கேமேன் தீவுகள் டாலர் (KYD)

  8. சுவிஸ் பிராங்க் (CHF)

  9. யூரோ (EUR)

  10. அமெரிக்க டாலர் (USD)

இந்த டாப் 10 கரன்சிகளின் மதிப்புகள் (இந்தியா ரூபாயின் இன்றைய மதிப்புப்படி)…

  • ஒரு குவைத் தினார் (KWD) = ரூ.270.21

  • ஒரு பஹ்ரைன் தினார் (BHD) = ரூ.220.56

  • ஒரு ஓமன் ரியால்(OMR) = ரூ.215.98

  • ஒரு ஜோர்டான் தினார்(JOD) = ரூ.117.20

  • ஒரு ஜிப்ரால்டர் பவுண்ட்(GIP) = ரூ.105.51

  • ஒரு பிரிட்டிஷ் பவுண்ட்(GBP) = ரூ.105.5

  • ஒரு கேமேன் தீவுகள் டாலர் (KYD) = ரூ.99.92

  • ஒரு சுவிஸ் பிராங்க் (CHF) = ரூ.96.12

  • ஒரு யூரோ(EUR) = ரூ.90.48

  • ஒரு அமெரிக்க டாலர் (USD) = ரூ.83.14

டாலர் அதிகம் வணிக செய்யும் நாணயம்…

என்ன தான் உலகம் முழுவதும் வணிகத்திற்கு அதிகம் பயன்படுத்தும் நாணயம் டாலராக இருந்தாலும், குவைத் தினார் 1960-ல் அறிமுகப்படுத்தியதில் இருந்து, இது தான் உலகில் அதிக மதிப்புமிக்க நாணயமாக இருந்து வருகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.