‘பிக்பாஸ்’ சீசன் 7 நிகழ்ச்சியின் ‘Bigg Boss 7 Grand Finale’ இன்று இரவு நடைபெற்றது.

இதில் ‘Thug life’ படம் குறித்தும் ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கும் ‘KH237’ படம் குறித்தும் பேசினார். ‘Thug life’ படம் குறித்து பேசியவர், ” ‘Thug life’ என்பதற்கு நிறைய அர்த்தங்கள் இருக்கின்றன. முதலில் படத்திற்கு டைட்டில் வைத்துவிட்டோம். அதன் பிறகுதான் இந்தத் தலைப்பின் பன்முகத்தன்மை தெரிந்தது. ‘தக்கீஸ்’ (Thuggees) என்கிற பயங்கரமான ஒரு கூட்டம் இருந்தது. அவர்கள் தோற்றுப்போன போராளிகள். அவர்கள் தங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய இந்தச் சமுகத்தின் மீது பழி தீர்க்க எண்ணி கொள்ளைக் கூட்டமாகவும், கொலைக் கூட்டமாகவும் மாறிவிட்டார்கள். நியாத்திற்காகக் குரல் கொடுப்பவர்களையும் இதே பெயரில்தான் அழைக்கிறார்கள். இப்போ சமூக வலைதளங்களில் நாம் சொல்லும் ‘கருப்பு கண்ணாடி போட்டு, சுருட்டை வாயில் வைத்தபடி இருக்கும் ‘Thug life’ என்பது வித்தியாசமானது” என்றார்.

KH237

“’எங்களுக்கு என்ன தேவை, என்ன வேண்டும்’ என்பதை அறிந்து இந்த வாய்ப்பைக் கொடுத்தார் கமல் சார்” என்றனர் அன்பறிவ் இருவரும்!

இதையடுத்து ‘KH237’ படம் குறித்து பேசிய கமல், “நல்ல திறமையாளர்களை இயக்குநர்களாக அறிமுகப்படுத்த வேண்டும் என்பது என்னுடைய ஆசை. எழுத்தாளர்களையும் இயக்குநராக மாற்ற வேண்டும் என்றும் ஆசை. ஓடுகிற குதிரை எது என்று பார்த்து அதன் மீது பந்தயம் கட்டுகிறவர்கள் நாங்கள் அல்ல. நல்ல திறமையாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்கவே ‘RKFI’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினோம்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.