கடந்த ஆண்டு கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த காங்கிரஸ், 5 இலவசத் திட்டங்களை வழங்குவதாக வாக்குறுதியளித்திருந்தது. அதில், அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு மாதம் 10 கிலோ இலவச அரிசி, ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் மின்சாரம், பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் என 4 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

கர்நாடக காங்கிரஸ் – யுவ நிதி திட்டம்

இதில், இறுதி வாக்குறுதியான வேலையில்லா பட்டதாரிக்கு மாதம் ரூ.3000, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1500 வழங்கப்படும் யுவ நிதி திட்டம் மட்டும் நிறைவேற்றப்படாமல் இருந்தது. இந்த நிலையில், நேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ஆகியோர் யுவ நிதி திட்டத்தையும், கர்நாடக மாநிலம் ஷிவமொக்காவில் தொடங்கி வைத்தனர்.

இந்த திட்டம் குறித்து கர்நாடக அரசு வெளியிட்டிருக்கும் தகவலில்,“தொடர்ந்து 6 மாதங்களாக வேலை கிடைக்காத பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ பெற்றவர்களுக்கு யுவ நிதி திட்டத்தின் மூலம், அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனடைய, வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ பெற்றவர்கள் மாநில அரசின் திறன் இணைப்பு வலையமைப்பில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

கர்நாடக காங்கிரஸ் – யுவ நிதி திட்டம்

இந்த திட்டம் குறித்துப் பேசிய கர்நாடக மருத்துவக் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரண் பிரகாஷ் பாட்டீல், “6 மாதங்களாக வேலை கிடைக்காமல், மேற்படிப்பையும் தொடராத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ரூ1,500 வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களைக் கர்நாடகா ஒன், கிராமா ஒன், பாபுஜி சேவா கேந்திரா அல்லது சேவா சிந்து இணையதளங்களில் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் ஆதார் அட்டை, வங்கி பாஸ்புக், ரேஷன் கார்டு, எஸ்.எஸ்.எல்.சி, பி.யு.சி, பட்டம் அல்லது டிப்ளமோ ஆகிய மதிப்பெண் பட்டியல்களை இணைத்திருக்க வேண்டும். இதுவரை யுவநிதி திட்டத்தில் சுமார் 70,000 இளைஞர்கள் பதிவு செய்திருக்கின்றனர். மேலும், இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் இளைஞர்களுடைய திறன்களை வளர்த்து, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வேலை கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.