எல்.ஐ.சி-யின் சேர்மன் சித்தார்த் மொஹந்தி எல்.ஐ.சி-யின் “ஜீவன் உத்சவ்” என்னும் புதிய திட்டத்தை 29.11.2023 அன்று அறிமுகப்படுத்தியுள்ளார். எல்.ஐ.சி-யின் ஜீவன் உத்சவ், ஒரு தனி நபர் சேமிப்பு மற்றும் முழு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இது பிரீமியம் செலுத்தும் காலம் முழுவதும் உறுதியளிப்புத் தொகை அளிக்கக் கூடிய வரையறுக்கப்பட்ட பிரீமியம் செலுத்தும் திட்டமாகும்.

எல்.ஐ.சி-யின் “ஜீவன் உத்சவ்” அறிமுகம்

பாலிசியின் சிறப்பு அம்சங்கள்…

  • இத்திட்டத்தில் 90 நாள்கள் முதல் 65 வயது வரை உள்ளவர்கள் பயன் பெறலாம்.

  • ஆயுள் முழுவதும் உறுதியளிக்கப்பட்ட வருமானம் மற்றும் ஆயுள் முழுவதும் காப்பீட்டுப் பாதுகாப்பு உண்டு.

  • குறைந்தபட்ச பிரீமியம் செலுத்தும் காலம் 5 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச பிரீமியம் செலுத்தும் காலம் 16 ஆண்டுகள்

  • ஒவ்வொரு பாலிசி வருடமும் பிரீமியம் செலுத்தப்பட்ட பிறகு அடிப்படை காப்புத்தொகையின் ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் ரூ.40 உறுதியளிப்புத் தொகையாக பிரீமியம் செலுத்தும் காலத்தில் பாலிசி வருடமுடிவில் வரவு வைக்கப்படும்.

  • பிரீமியம் செலுத்தும் காலத்திற்குப் பிறகு பாலிசிதாரர் வாழ்வுக்காலப் பயனாக கீழ்க்கண்ட தேர்வுப்பயன்களில் ஒன்றை தேர்வு செய்யலாம்.

தேர்வு 1 : சீரான வருமான பலன்

ஒவ்வொரு பாலிசி ஆண்டின் முடிவிலும் ஒத்திவைப்பு காலமான 3 முதல் 6 ஆண்டுகள் கழித்து அடிப்படை ஆயுள் காப்பீட்டுத்தொகையில் 10% வழங்கப்படும்

தேர்வு 2 : விருப்ப வருமான பலன்

ஒவ்வொரு பாலிசி ஆண்டின் முடிவில் வழங்கப்படும் 10% ஆயுள் காப்பீட்டுதொகையை உடனடியாக பெறாமல், அதனை மொத்தமாக பிறகு எல்.ஐ.சி-யின் பாலிசி நிபந்தனைகளின் படி பிறகு பெற்றுக்கொள்ளும் வசதி. இதற்கு 5.5% ஆண்டு கூட்டு வட்டியும் அளிக்கப்படுகிறது.

LIC

காப்பீட்டின்  பலன்கள்

காப்பீட்டுப் பாதுகாப்பு தொடங்கப்பட்ட பிறகு பாலிசி நடப்பில் இருந்தால், பாலிசிதாரர் இறப்பின் போது “இறப்புக் காப்பீட்டுத் தொகை” சேர்ந்துள்ள உறுதியளிப்புத் தொகையுடன் அளிக்கப்படும். இறப்பு தேதி வரை செலுத்தப்பட்ட பிரீமியத்தின் 105% -க்கு குறையாமல் இறப்பு பலன் வழங்கப்படுகிறது. “அடிப்படை காப்பீட்டுத்தொகை” அல்லது “ஆண்டுப்பிரீமியத்தின் 7 மடங்கு“ இவற்றில் எது அதிகமோ அது இறப்புக் காப்பீட்டுத் தொகையாக நிர்ணயிக்கப்படும்.

  • முதிர்வுப் பயனுக்கு மாற்றாக, ஒத்திவைப்பு காலத்திற்கு பிறகு சீரான/விருப்ப வருமான பலன் வழங்கப்படுகிறது.

  • கடன் வசதி உண்டு

  • உயர் காப்பீட்டுத் தொகைக்கான பிரீமியத்தில் தள்ளுபடி உண்டு

  • இத்திட்டத்தில் 5 விருப்பத்தேர்வு பயன்கள் அளிக்கப்படுகின்றன.

  • விபத்தினால் நேரும் உயிரிழப்பு மற்றும் திறன் செயலிழப்பு

  • விபத்து காப்பீடு

  • டெர்ம் அஷ்யூரன்ஸ் தேர்வு

  • இடர்தரும் நோய்களுக்கான பயன்

  • வருங்கால பிரீமியங்களிலிருந்து விலக்கு

இத்திட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், கார்ப்பரேட் முகவர்கள், தரகர்கள், காப்பீட்டு வணிக நிறுவனங்கள் மற்றும் ஆன்லைனிலும் பெறலாம். (இதன் தனித்த அடையாள எண் 512N363V01)

மேலும் விவரங்களுக்கு www.licindia.in என்ற வலைதளத்தை பார்க்கலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.