வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தின்‌ பல இடங்களில் கனமழை..‌ புயல் தற்போது ஆந்திராவை நோக்கிச் சென்று விட்ட காரணத்தினால் மழையும் , காற்றின்‌ வேகமும் குறைந்து இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல தொடங்கி விடும் இனி..

இயற்கையை நம்மால் கணிக்க முடியாது. இன்று‌ இவ்வளவு மழை வரும், இன்றைய வெப்பநிலை இது எனக் கண்டறிய‌ முடியுமே தவிர, மழை ஏற்படுத்திச் செல்லும் பாதிப்புகளை நம்மால் முன்கூட்டியே ஊகிக்க முடியாது..

சென்னை மழை

ஒரு‌ வாரம் முன்பாகவே செய்திகளில் அறிவுப்புகள்‌ வந்த வண்ணம் இருந்தன..‌இந்தந்த நாட்களில் இந்தந்த இடங்களில் எல்லாம்‌ காற்றும் மழையும் பலமாக இருக்கும்..‌மக்கள்‌ ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என செய்திகளில் பார்த்திருந்தோம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிலவற்றை செய்திருந்த போதும், இரண்டு நாட்களாக பெய்து வந்த மழை மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது..

முக்கியமாக சென்னை போன்ற‌ பெருநகரங்களில் வசிப்பவர்களின்‌ நிலை ஒவ்வொரு புயல் மற்றும்‌ மழை காலத்தில் கவலைக்குரிய விஷயமாக மாறிவருகிறது..‌

வீடுகளில் நீர்‌ புகுந்துவிடுவது, சுற்றுப்புறம் முழுவதும் ஏரி போல் மாறிவிடுவது, அவசரத்திற்குக் கூட‌ வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை..‌எல்லாவற்றிற்கும் மேலாக மின்சாரம் துண்டிப்பு..

வெளியே கொட்டோ கொட்டு எனும் மழை, ஆனால் மோட்டார் போட‌ முடியாமல் , வீட்டிற்குள் சிறிதளவும் தண்ணீர் இல்லாத நிலை..நகரம் மாபெரும் வளர்ச்சி அடைந்ததால், மக்களின்‌‌ வருகைக்குத் தகுந்தவாறு நகரம் தன்னை புதுப்பித்துக் கொண்டே‌ இருப்பதால், இது போன்ற‌ பேரிடர் காலங்களில் இழப்புகள் ஏற்படுகின்றன..

சென்னை மழை!

மின்சாரமும்‌ இல்லாமல், மழையும் நிற்காமல் அச்சத்தில் மக்கள் உறைந்தபோது, சென்னை மீண்டும் அதே முகத்துடன்‌ இயல்பு நிலைக்குத் திரும்பும் என்ற‌ நம்பிக்கை இருந்ததால் மட்டுமே கடந்த இரண்டு நாட்களையும் சென்னை‌வாசிகளால் கடக்க முடிந்தது.. வீட்டை விட்டு வெளியே வரும் நிலை இல்லாத போதும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் வெளியே வந்து உதவிய அனைத்து மனிதர்களுக்கும் இந்த நகரம் நன்றிக் கடன்‌பட்டுள்ளது. தூய்மை பணியாளர்கள், பேருந்து ஓட்டுநர்கள், இரயில் ஓட்டுநர்கள், சில அரசாங்க அதிகாரிகள், உணவு டெலிவரி செய்தவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என பலரும் இவர்களில் அடக்கம்.. இவர்களின்‌ உதவிகளும் இல்லையென்றால் இன்றளவும் நகரம் தத்தளித்துக் கொண்டுதான்‌ இருக்கும்..‌

பொருளாதார‌ ரீதியாக இழப்புகள் இருந்தாலும், மனரீதியாக இழப்புகள் இல்லாதவரை, இந்தப் புயல் மட்டுமல்ல எந்தப் புயலும் தூசு தான்..‌

சில இயற்கைச் சார்ந்த பேரழிவுகளுக்கு மனிதர்களாகிய‌ நாம் மட்டுமே காரணம்..‌செய்த தவறை, செய்து கொண்டு இருக்கின்ற தவறை சிறிது மாற்றியமைத்துக் கொண்டோமேயானால், இயற்கையும்‌ நம்மை வருங்காலங்களில் பழிவாங்குவதை நிறுத்திக் கொள்ளும்.

சென்னை வெள்ளம்

நகரம் மீண்டும்‌ பழைய பொலிவுடன் காட்சியளிக்க , பழைய‌ நிலைக்குத் திரும்ப…மக்கள் அன்றாட‌ வேலைகளுக்கு வீட்டை விட்டு வெளியே‌வர….‌காற்றையும் , மழையையும் சமரசம் செய்ய சூரியன் வந்தே தீர‌வேண்டும்..

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.