‘தீபாவளி-ன்னா பட்டாசு, பட்டாசு-ன்னா தீபாவளி’ – இந்த இரண்டையும் எப்போதும் பிரிக்கவே முடியாது. 70’ஸ் கிட்ஸ், 80’ஸ் கிட்ஸ், 90’ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ்…இனி வரப்போகும் கிட்ஸ் என எந்த யுக கிட்ஸாக இருந்தாலும், பட்டாசு சத்தம் கேட்காமலும், குறைந்தபட்சமாக கம்பி மத்தாப்புகூட கொளுத்தாமல் இருக்கவே மாட்டார்கள்.

நாம் வெடிக்கும் ஒவ்வொரு பட்டாசும் ஒரு மீம் டயலாக் பேசினால் அல்லது யோசித்தால் எப்படி இருக்கும்? என்று சும்மா ஒரு கற்பனை செய்வோமா…

நீ ஒரு ஆர்டிஸ்ட் லே

கம்பி மத்தாப்பைக் கொளுத்தி அதில் தெறிக்கும் நெருப்பு பூவை பார்ப்பதைவிட, காற்றில் மத்தாப்பை வைத்து ‘ஓ’-வையும், ‘ஹேப்பி தீபாவளி’-யையும் எழுதிப் பார்க்கும் 90’ஸ் கிட்ஸ் மற்றும் 2 கே கிட்ஸின் ஃபீலே தனிதான். இந்தத் தருணத்தில் மத்தாப்பு பேசினால் ‘நீ ஒரு ஆர்டிஸ்ட் லே’ என்று தோளைத் தட்டிக்கொடுக்கும்.

100 வாலா சரவெடியாக இருந்தாலும், 10,000 வாலா சரவெடியாக இருந்தாலும் பக்கத்தில் போவதும், வருவதுமாக இருப்போம். அதுவும் பின்னாடி இருந்து ‘ஏய்…பத்திடுச்சு சீக்கிரம் ஓடி வா’ என்று கத்துவார்களே…பற்றவே வைக்காமல் பதறி ஓடிவருவோம் பாருங்கள்…அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இதைப் பார்த்து சரவெடி பேசினால் எப்படி இருக்கும்? ‘வாங்க…ஏன் பயப்படுறீங்க…வாங்க அ(வெ)டிக்கலாம் மாட்டேன்’.

இதற்கு நேர்மாறாக, சில பட்டாசுகளைப் பற்ற வைத்திருப்போம். ஆனால் இன்னும் பற்றவில்லை என்ற நினைப்பில் கிட்டே போய் உற்றுப் பார்க்கையில், ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?’ என்பதுபோல கெத்தாக வெடிக்கும்.

எந்தப் பட்டாசு என்னதான் சவுண்டை ஏற்படுத்தினாலும், ஆட்டம் பாம் சவுண்டே தனி ரகம் தான். காது கிழிய சத்தம் கேட்க, தூசி துரும்பு பறக்க, நிலம் அதிர்வது மாதிரி வெடிக்கும்போது ஆட்டம் பாம் ‘சும்மா அதிருதுல்ல’ என்ற டயலாக்கை சொன்னால் எப்படி இருக்கும்?

சும்மா அதிருதுல்ல

‘இந்தப் பட்டாசு பார்க்க புதுசா இருக்கே…பயங்கராமா வெடிக்கும் இல்லைனா மேல போய் வெடிக்கும்’ என்று ஏகப்பட்ட கனவுகளோடு வாங்கிவந்து வெடிக்கும்போது புஸ்வானம் போல நெருப்பு விரிந்து நான் ஒரு ‘டம்மி பாவா’ என்று கூறும்போது நமக்கு நிச்சயம் ஏமாற்றம் எட்டிப்பார்க்காமல் இருக்காது.

90’ஸ், ஏர்லி 2கே கிட்ஸுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு ‘திருடன் – போலீஸ்’. அதுவரைக்கும் கையை மடக்கி தூப்பாக்கி மாதிரி செய்கை காட்டி விளையாடிக்கொண்டிருந்த நாம், தீபாவளி வந்ததும் துப்பாக்கியும், ரோல் கேப்பும் வாங்கி சுடுவதுபோல நடிக்கும்போது…துப்பாக்கியின் மைண்ட் வாய்ஸ் ‘என்ன வெச்சு காமெடி, கீமடி பண்ணலையே’.

சரவெடி, ராக்கெட், சாட்டை, கம்பி மத்தாப்பு என்று 1000 வெடி வெடித்துவிட்டு, ஒரே ஒரு வானவெடி வைத்தாலும் அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருப்போம். அப்போது அந்த வானவேடிக்கை be like: ‘இதுக்கு தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணுங்கறது….’

ஆல் இன் ஆல் அழகுராஜா

இப்போ கொஞ்சம் பெட்டிக்கு வெளியே போய் (அதாங்க அவுட் ஆப் த பாக்ஸ்’) பாக்கலாம், தீபாவளி அன்னைக்கு சரியாக மழை அட்டெண்டன்ஸ் போட்டுவிடும். அப்போது நம் மைண்ட் வாய்ஸ் be like: ‘எனக்குனே வருவீங்களாடா?’

மக்களே, உங்கள் சிந்தனையில் உதிக்கும் பட்டாசையும், அது பேசக்கூடிய டயலாக்கையும் கமென்ட்ஸில் தட்டிவிடுங்க…

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.