சென்னையின் பிரபல பில்ராத் மருத்துவமனை கடந்த 25ஆம் தேதி ஞாயிற்றுகிழமை அன்று, நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘லியோ’ திரைப்படத்துக்கான 4500 டிக்கெட்டுகள் மற்றும் உணவு கூப்பன்களை, புற்று நோயிலிருந்து மீண்டவர்கள், மருத்துவமனையின் அனைத்து ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என அனைவருக்கும் வழங்கியது. பில்ராத் மருத்துவமனையின் இந்த செயல் சமூகத்தின் அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி, FM மற்றும் செய்தி தாள்களில் இந்த செய்தி வெளியானது. ‘லியோ’ திரைப்படத்தின் இயக்குநர் திரு.லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் மருத்துவமனையின் தலைவர்  திரு. ராஜேஷ் ஜெகநாதன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பாராட்டியுள்ளார்.

Billroth Hospital

வேகமாக மாறிவரும் மருத்துவத்துறையில், புதிய தொழில்நுட்பங்களின் தேவைகளை நன்கு உணர்ந்த பில்ராத் மருத்துவமனையின் தலைவர், உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளை அனைத்து மக்களுக்கும் வழங்கி மருத்துவ துறையில் தொடர்ந்து வெற்றி கண்டுள்ளார்.

இம்மருத்துவமனை ‘ராப்பிட் ஆர்க்’ எனப்படும் அதிநவீன புற்று நோய் கதிரியக்க சிகிச்சை முறையை முதன் முதலில் சென்னைக்கு கொண்டு வந்தது. தமிழகத்தின் முதல் ‘MODULAR FLAT PANEL CATHLAB’ கொண்டு வந்த பெருமையும் பில்ராத்துக்கு உண்டு. இத்தகைய உலகதரம் வாய்ந்த சிகிச்சை முறைகளை அனைத்து தரப்பினருக்கும் உறுதி செய்ய வேண்டும் என்ற உயரிய எண்ணமே, இந்த ‘லியோ’ திரைப்பட டிக்கெட் விநியோகத்திலும் பிரதிபலித்துள்ளது.

சமூக, பொருளாதார காரணங்களுக்காகத் திரைப்படத்தை குறிப்பிட்ட தேதியல் பார்ப்பதைத் தவிர்க்க எண்ணும், தங்கள் மருத்துவ குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் சிறந்த பொழுது போக்கை உறுதி செய்ததன் மூலம், தம் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் பிணி தீர்த்துக்கொள்ள வரும் நோயாளிகள் மீதுள்ள அக்கறையை இம்மருத்துவமனை வெளிப்படுத்தி உள்ளது.

இதைப்போன்ற செயல்கள் ‘CSR’ என்றழைக்கப்படும் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கு சற்றும் குறைவானதன்று.

இது குறித்து பேசிய மருத்துவமனை ஊழியர்கள்,
“எங்கள் அன்புக்குரிய தலைவருக்கு மனமார்ந்த நன்றி. பிஸியான நாட்களுக்கு மத்தியில் இது ஒரு சிறந்த நேரம். ஐயா, உங்கள் ஊழியர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணம் ஒரு சிறந்த தலைமைத்துவ குணம் மற்றும் தாராள மனப்பான்மையாகும், இது தற்போது வேறு எந்த நிறுவனங்களிலும் இல்லை. பில்ரோத் மருத்துவமனைகளின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை அடைகிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினர்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.