லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் ‘Ordinary Person’ பாடல் ‘பீக்கி ப்ளைண்டர்ஸ்’ சீரிஸிலிருந்து காப்பியடிக்கப்பட்டதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். நேற்று (அக்டோபர் 23), படக்குழு ‘Ordinary Person’ பாடலை லிரிக் வீடியோவாக யூடியூப்பில் வெளியிட்டது. அதிலிருந்து இந்தச் சர்ச்சை வெடித்துள்ளது.

அனிருத் – லியோ

பாடல் வெளியான உடனேயே, ஒரு பிரிவினர் இது ஒட்னிக்கா மற்றும் டியூக் லூக்கின் ‘பீக்கி ப்ளைண்டர்ஸ்’ (Peaky Blinders) – ‘I’m not outsider’ (Where are you?) டிராக்கிலிருந்து எடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்த நிலையில் இசையமைப்பாளர் ஒட்னிக்கா இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். 

அவர் வெளியிட்டிருந்த பதிவில், “நண்பர்களே, ‘லியோ’ திரைப்படம் குறித்து நீங்கள் எனக்கு அனுப்பிய மெசேஜ்களுக்கு நன்றி. மெயில், இன்ஸ்டாகிராம், யூடியூப் என அனைத்து தளங்களிலும் அந்த பாடலைக் குறிப்பிட்டு கமென்ட் செய்து வருகிறீர்கள்.

எல்லாவற்றையும் பார்த்தேன். அவற்றிற்கெல்லாம் தனித்தனியாக என்னால் பதில் சொல்ல இயலவில்லை. இந்த சர்ச்சைகள் குறித்து எனக்குத் தெளிவாக எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து விசாரிக்கச் சிறிது நேரம் கொடுங்கள். அதுவரை நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை” என்று பதிவிட்டிருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.