OnePlus Pad Go பாக்ஸூக்குள்…

  • ஒரு OnePlus Pad Go டேப்லெட் 

  • சிவப்பு நிற டைப் ஏ-சி கேபிள்

  • 33W SUPER VOOC சார்ஜர்

  • ஒரு சிம் ட்ரே எஜக்டர் மற்றும்

  • ஒரு ரெட் கேபிள் கிளப் மெம்பர்ஷிப் கார்டு

OnePlus Pad Go Review

விலை: 

முழுக்க முழுக்க பொழுதுபோக்கை மையமாகக் கொண்டு விலையடக்க பேடாக இதனை அறிமுகப்படுத்தியுள்ளது ஒன்ப்ளஸ். இதனை மூன்று வகையாகப் பிரித்துள்ளது அந்த நிறுவனம். வெறும் Wifi தொழில்நுட்பத்தை மட்டும் கொண்ட பேடினை 19,999 ரூபாய் விலையில் வெளியிட்டுள்ளது. அது 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்டது. இதே ஸ்டோரேஜுடன் Wifi தொழில்நுட்பத்தோடு சேர்த்து சிம்கார்டு போடக்கூடிய LTE இணைப்பு கொண்ட மற்றொரு வேரியண்ட் 21,999க்கும், அதே சிம்கார்டு போடக்கூடிய மற்றொரு வேரியன்ட் 8 GB RAM மற்றும் 256 GB ஸ்டோரேஜூடன் 23,999க்கும் விற்பனைக்கு வெளியாகியுள்ளன. இது ட்வின் மின்ட் எனும் பச்சை நிற கலர் வேரியன்ட்களில் கிடைக்கின்றன. இதில் நம்மிடம் கிடைத்தது 8RAM + 256GB ஸ்டோரேஜ் கொண்ட மாடல்தான்.

டிசைன்:

OnePlus Pad-னை போலப் பச்சை நிறத்திலே இந்த டேப்லெட்டினை டிசைன் செய்திருக்கிறார்கள். பின் பக்கம் இரண்டு பீனிஷிங் என்பதாகக் கீழே அலுமினிய மெட்டல் பினிஷிங்கும், மேலே கிளாஸி பினிஷிங்கும் கொடுத்திருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் மேலே கொடுக்கப்பட்ட கிளாசி பினிஷ் விரல் ரேகைகள் பதிகின்ற அசௌகரியத்தைக் கொடுக்கிறது. கேமரா மாடுயூல் சில்வர் ரிங் கொண்டு OnePlus Pad-ன் டிசைனுடன் ஒத்துப்போகிறது. மொத்தத்தில் டிசைனில் கிளாசி பினிஷ் இல்லாமல் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

OnePlus Pad Go Review

டிஸ்பிளே: 

11.35 இன்ச் டிஸ்ப்ளேவுடன் 532 கிராம் எடையைக் கொண்டிருக்கிறது இந்த OnePlus Pad Go. டேப்லெட்டின் நான்கு முனைகளும் சாஃப்ட் எட்ஜஸ் கொண்டதாக இருக்கின்றன. 90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 2.4 K IPS LCD டிஸ்ப்ளேயைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதில் 400 நிட்ஸ் பிரைட்னெஸ் வரை வைத்துக்கொள்ளலாம். அதனால் டிஸ்ப்ளே பயன்படுத்துவதற்குச் சிறப்பாகவே இருக்கிறது. பவர் பட்டன், வால்யூம் பட்டன் மற்றும் சார்ஜிங் போர்ட்டுக்குப் பக்கத்தில் சிம் ட்ரேயும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரு நானோசிம் கார்டு மற்றும் மெமரி கார்டுக்கான ஸ்லாட்டுகளும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

OnePlus Pad Go Review

அதில் 1 TB வரை மெமரி கார்டினைச் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் டேப்லெட்டினைச் சுற்றி இரண்டு பக்கங்களிலும் இரண்டு ஸ்பீக்கர் என Quad ஸ்பீக்கர் செட்டப் கொடுத்திருக்கிறார்கள். அதில் அருமையான டால்பி அட்மாஸ் சரவுண்டிங் டெக்னாலஜி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஹெட் செட் ஜேக் தரப்படவில்லை. மொத்தத்தில் ஒரு படம் பார்க்கப் பெரிய டிஸ்பிளே மற்றும் நல்ல சவுண்டிங் கொண்ட ஒரு டேப்லெட்டாக இது இருக்கிறது. ஆனால் இதில் ஒன் பிளஸ்ஸுக்கு உரிய கீ-போர்டினைப் பயன்படுத்த இயலாது.

பிராசஸர் மற்றும் சாப்ட்வேர்:

இதில் Mediatek MT8781 Helio G99 எனும் பிராசஸரைப் பயன்படுத்தியிருக்கிறது ஒன்ப்ளஸ். இது 8 GB LPDDR4X RAM-ல் இயங்குகிறது. இது ஒரு நடுத்தர நிலையில் இயங்கக்கூடிய பிராசஸர் மட்டுமே! அதிக கிராபிக்ஸ் இருக்கக்கூடிய கேம்கள் விளையாடும்போது சிரமம் ஏற்படலாம். அதைக் குறைவான கிராபிக்ஸில் வைத்து விளையாட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். இது கேமிங் டேப்லெட் கிடையாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

இது ஆண்ட்ராய்டு 13 ஆக்சிஜன் சாப்ட்வேரில் இயங்குகிறது. படம் பார்ப்பது, புத்தகம் படிப்பது, குறிப்புகள் எடுப்பது என மிதமான பயன்பாட்டினை உடையோருக்கு உகந்ததாக இருக்கிறது. டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன் இரண்டும் ஒரே OnePlus கணக்கில் உள்நுழைந்து பயன்படுத்தினால் ​​பயனர்கள் ஸ்கிரீன் மிரரிங் வசதி மூலம் இரண்டையும் பயன்படுத்தலாம்.

OnePlus Pad Go Review

பேட்டரி: 

பேட்டரி பேக்கப்பைப் பொறுத்தவரை, OnePlus Pad Go ஆனது 33W SUPERVOOC சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 8,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது அதிகமான நேரம் டேப்லெட்டைப் பயன்படுத்தும் நேரத்தை கொடுக்கிறது. 33W சார்ஜர் இருந்தாலும் 8000mAh என்னும் நிலையை அடைய அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.

கேமரா: 

பெரும்பாலும் டேப்லெட்டினை யாரும் கேமராவுக்காகப் பயன்படுத்துவது கிடையாது. அந்த வகையில் முன் பின் கேமராக்கள் முறையே 8MP கேமராக்கள் என்ற வகையில் சம்பிரதாயத்துக்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. இது கூகுள் மீட் மற்றும் டாக்குமெண்ட்களை ஸ்கேன் செய்யும் அளவுக்கான தரத்தில் மட்டுமே இருக்கிறது. 

OnePlus Pad Go Review

OnePlus Pad Go வாங்கலாமா?

ஒரு வருடத்துக்கு முன் 20 ஆயிரம் ரூபாயில் ஒன்பிளஸ் டேப்லெட் என்பது ஆச்சர்யமான விஷயம்தான். ஆனால் இப்போது அது சாத்தியமாகி இருக்கிறது. இது வீடியோ பார்ப்பது, படம் பார்ப்பது, புத்தகம் படிப்பது போன்ற பயன்பாடுகளுக்கு நிச்சயமாக ஒரு நல்ல தேர்வாக இருக்கும். ஆனால் இதே விலையில் இருக்கும் மற்ற நிறுவனத்தின் டேப்லெட்களில் இதை விடக் கூடுதலான பயன்பாடுகள் இருப்பதையும் மறுக்க முடியாது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.