கடந்த 1998-ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற ‘அமர்த்தியா சென்’ இறந்துவிட்டார் என ‘கிளாடியா கோல்டின்’ என்கிற எக்ஸ் பக்கத்தில் தகவல் கசிய, அந்த செய்தி சரியா அல்லது தவறா என்பதை தெரிந்துகொள்ள நினைத்தோம்.

‘கிளாடியா கோல்டின்’ எக்ஸ் பக்கத்தில் போட்டு 22 நிமிடங்கள் ஆகியும், அமர்த்தியா சென்னின் மகளான ‘நந்தனா சென்’ தனது எக்ஸ் பக்கத்தில் போடாததுதான் எங்களின் சந்தேகத்தைக் கிளப்பியது. மேலும், சர்வதேச மீடியாக்கள் எதுவும் இந்த செய்தியை வெளியிடவில்லை.

அமர்த்தியா சென்

இந்த நிலையில், இந்தியாவின் சில ஆங்கில மற்றும் தமிழ் மீடியாக்கள், ‘அமர்த்தியா சென் உடல்நலக் குறைவால் காலமாகிவிட்டார்’ என்கிற செய்தியை போட, அது வைரலாக ஆரம்பித்தது.

ஆனால், ‘கிளாடியா கோல்டின்’ எக்ஸ் பக்கம், அந்த நிறுவனத்தால் வெரிஃபைடு செய்யப்படாத பக்கமாக வேறு இருந்தது இன்னும் நமக்கு சந்தேகத்தை அதிகப்படுத்த, தீவிரமாக விசாரித்தோம். அப்போது அவர் நலமாக இருப்பது தெரியவந்தது.

இதை உறுதி செய்யும் வகையில், பி.டி.ஐ செய்தி நிறுவனம் அவசரப்பட்டு போட்டிருந்த தவறான செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், “Deleting tweet on Amartya Sen based on a post from an unverified account in the name of Claudia Goldin. Actor Nandana Dev Sen denies news of death of her father, Nobel prize winner Amartya Sen” என்கிற பதிவை அவர்கள் போட்டிருந்தார்கள். இதைத் தொடர்ந்து பல மீடியாக்களும் தாங்கள் போட்ட தவறான செய்தியை நீக்கியிருக்கின்றன.

சில நிமிடங்களுக்குமுன் மீண்டும் ‘கிளாடியா கோல்டின்’ எக்ஸ் பக்கத்தில் ‘This account is hoax created by Italian journalist Tommaso Debenedetti’ என்கிற மெசேஜ் பதிவாகியிருக்கிறது. அதாவது, ‘இந்த எக்ஸ் பக்கம் வதந்தி பரப்புவதற்காக உருவாக்கப்பட்டது’ என பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அமர்த்தியா சென்னின் மகள் நந்தனா சென்னின் எக்ஸ் பக்கத்தில் உறுதியான தகவல் கீழே…

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.