‘போட்டா போட்டி’ வடிவேலு நடித்த ‘தெனாலிராமன்’, ‘எலி’ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் யுவராஜ் தயாளன். 

தற்போது இறுகப்பற்று படத்தினை இயக்கியிருக்கிறார். நடிகர்கள் விக்ரம் பிரபு, `மாநகரம்’ ஸ்ரீ, விதார்த் ஆகியோர் நாயகர்களாகவும் நடிகைகள் ஷரத்தா ஸ்ரீநாத், அபர்ணா நதி, சான்யா ஐயப்பன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அக்டோபர் 6-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் நேற்று படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் இயக்குநர் யுவராஜ் தயாளன் நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தார்.

இறுகப்பற்று

“ஒரு விஷயம் என்னை எட்டு வருஷமா தூங்க விடல. அதைப் பத்திதான் இந்த மேடையில பேசனும்னு நினைச்சேன். எலி படத்தோட பிரஸ் மீட் இங்கத்தான் நடந்துச்சு. வழக்கமா ஒரு பிரஸ் ஷோ முடிஞ்சா எல்லோரு வெளிய வருவாங்க ஆனா அன்னைக்கு யாரும் வெளிய வரல. அப்போ நானும் வடிவேல் அண்ணாவும் உள்ள வந்தோம். யாருமே எங்ககிட்ட எந்த ஒரு கேள்வியும் கேக்கல. எல்லோரு அமைதியா இருந்தாங்க. வடிவேல் அண்ணா, `படம் எப்படி இருந்துச்சுனு கேளுங்க தம்பி’னு சொன்னாரு.  நானும் கேட்டேன். அப்போது அங்க ஒரு மயான அமைதியா இருந்துச்சு. அந்த மாதிரி ஒரு அமைதியை ஒரு சில படத்துக்கு மட்டும்தான் பார்த்திருக்கேன்.

உதாரணத்துக்கு பாலா சாரோட பரதேசி, அமீர் சாரோட பருத்தி வீரன், மிஸ்கின் சாரோட அஞ்சாதே, சேரன் சாரோட படங்களின் போதுதான்அப்படி ஒரு அமைதிய பார்த்திருக்கேன். அதுக்கு அப்றோ அப்படி  ஒரு அமைதிய  என்னோட படத்துலதான் பார்த்தேன். படம் முடிஞ்சு இவ்ளோ அமைதியா இருக்காங்க அப்படினா இரண்டு காரணம் இருக்கும். ஒன்று உலகப்புகழ் பெற்ற படமா இருக்கணும். இல்லனா அதற்கு எதிர்மறையா இருக்கணும். அதுல நான் இரண்டாவது காரணத்தை எடுத்துக்கிட்டேன். அதன் பிறகு சினிமா விட்டு ரொம்ப தூரம் நடந்து போயிட்டேன்.

யுவராஜ் தயாளன்

எனக்கு தூக்கமே வரல. அந்தநாள் ஒரு அமைதி இருந்துசுல அந்த அமைதி வந்து என்ன கொன்னுருச்சு. உங்க மூன்று மணி நேரத்த கடன் வாங்கி திரும்ப தரமுடியலனு ரொம்ப கஷ்டமாயிருச்சு.  அதுக்கு அப்றோம் எட்டு வருஷம் ஆயிருச்சு. நானும் ஒரு வருஷம் முயற்சி செய்தேன். அப்றோ என்னோட காலேஜ் சீனியர் கமல்தாஸ் கால் பண்ணி படம் பண்றயானு கேட்டாரு இல்லனு சொன்னேன். அவர் என்ன ஒரு ஆபிஸுக்கு கூட்டிட்டு போனாரு. எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு. நான் உள்ள வரலனு சொல்லிட்டேன். அவரு என்ன கையப்பிடிச்சு உள்ள கூட்டிட்டு போனாரு. அங்க தங்க பிரபாகரன் சார் இருந்தாரு.

யுவராஜ் தயாளன்

அப்புறம் கால் பண்ணி கதை இருக்கானு கேட்டுட்டே  இருந்தாங்க. அப்பதான் கதை எழுத ஆரம்பிச்சேன். என்னோட நேர்மையை நான் இங்க காட்றேன். அதே போல மக்களா நீங்களும் நேர்மையா இருங்க . டிரைலர் பார்த்திட்டு நிறைய பேர் விமர்சனம் பண்ணீங்க. படத்தை தியேட்டர்ல வந்து பார்த்திட்டு சொல்லுங்க” என்று எமோஷனலாக பேசியிருந்தார்.      

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.