வாழ்க்கையே வாழத்தானே… எத்தனை காலத்திற்கு உழைத்துக் கொண்டிருப்பது, முடிந்தளவு உழைத்து, உழைத்துச் சேர்த்த காசில், வாழ்வை மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டாமா. இந்த திட்டமிடலை பெரிதாகக் கவனத்தில் கொள்கிறோமா?!.

ஆனால் 22 வயதிலேயே ஒருவர் ரூ.41 கோடி பணத்துடன் தனது 35 வயதுக்குள் ஓய்வு பெறத் திட்டமிட்டு செயல்படுகிறார். அவரின் எதிர்காலம் குறித்த திட்டமிடல்களும் முதலீடுகளும் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

ஈதன் நகுன்லி | ethan nguonly

22 வயதாகும் ஈதன் நகுன்லி கூகுளில் சாஃப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்கிறார். ஆரம்பக் காலத்தில் நகுன்லியின் பெற்றோர்கள் `வங்கி கணக்குகளில் பணத்தைச் சேமித்து வைக்கலாம்; ஆனால், காலப்போக்கில் அவற்றின் மதிப்பு குறைந்து விடும்’ எனக் கூறியுள்ளனர். இது இவரின் முதலீட்டின் பார்வையை வேறு பக்கம் திருப்பியது.

ஈதன் நகுன்லி | ethan nguonly

இரண்டே ஆண்டில் கலிபோர்னியா பல்கலைகழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் டிகிரியை முடித்தார். அதோடு முழு நேர வேலை பார்த்துக் கொண்டே தன்னுடைய `இன்ஃபர்மேஷன் அண்ட் டேட்டா சயின்ஸ்’ முதுகலை படிப்பையும் முடித்தார்.

கூகுளில் சாஃப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிய வேண்டும் என்ற கனவும் 2021 டிசம்பரில் கைவசம் கூடியது. போனஸ் மற்றும் ஸ்டாக் யூனிட்கள் என அனைத்தையும் சேர்த்து, அவரின் ஆண்டு வருமானம் 1,94,000 அமெரிக்க டாலர். அதாவது 1.60 கோடி ரூபாய்.

முன்கூட்டியே ஓய்வு பெறுவதற்காக சுமார் 1.11 கோடி ரூபாய் பணத்தைப் பல ஓய்வு மற்றும் முதலீட்டு கணக்குகளில் செலுத்தி இருக்கிறார். அதோடு ரியல் எஸ்டேட் மார்க்கெட்டிலும் இறங்கி இருக்கிறார். 

தன்னுடைய வருமானத்தில் கணிசமான பகுதியை முதலீடுகளுக்காக ஒதுக்குகிறார். வீட்டிற்கு ஒதுக்கப்படும் தொகையைத் தவிர்த்து, வருமானத்தில் 35 சதவிகிதத்தைத் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறார்.

2021-ல் கிரிப்டோகரன்சியில் அதிக அளவில் முதலீடு செய்தபோது 80,000 அமெரிக்க டாலர் இழந்துள்ளார். தன்னுடைய முதலீடுகளில் சில தவறுகளைச் செய்து அதைப் பாடமாக எடுத்துக் கொண்டு, நீண்ட கால முதலீடுகளில் குறிப்பாக `எக்ஸ்சேஞ் ட்ரேட் ஃபண்டு’ மற்றும் `ரியல் எஸ்டேட்டில்’ முதலீடு செய்யத் தொடங்கியுள்ளார்.

ஈதன் நகுன்லி | ethan nguonly

சில வருடங்களுக்கு ஒருமுறை ரியல் எஸ்டேட் பங்குகளைத் தொடர்ந்து வாங்குவது, அவரது திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது. முன்கூட்டிய ஓய்வுக்கான முயற்சியில் ஈதன் நகுன்லி உறுதியாக இருக்கிறார்.

இவரின் முதலீடுகளும், எதிர்காலம் குறித்த திட்டமிடல்களும் பலரையும் அடடே போட வைத்திருக்கிறது.

நீங்கள் முதலீடு செய்ய ஆரம்பித்துவிட்டீர்களா?!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.