செப்டம்பர் 18 முதல் 22-ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டம், `ஒரே நாடு ஒரே தேர்தல்’, பெண்களுக்கான இட ஒதுக்கீடு போன்றவை விவாதிக்கப்பட்டு அமல்படுத்தப்போவதாகப் பேச்சுகள் வந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறிருக்க, டெல்லியில் இந்த வார இறுதியில் நடைபெறவிருக்கும் `ஜி20′ கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவிருக்கும் நாடுகளின் தலைவர்களுக்கு, இரவு விருந்து தொடர்பாக இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அனுப்பியிருக்கும் கடிதத்தில், அவரை `பாரத குடியரசுத் தலைவர்’ என்று குறிப்பிட்டிருப்பது பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.

இந்தியா – பாரதம் பெயர் சர்ச்சை

இந்து சனாதன சித்தாந்த கோட்பாட்டை உள்வாங்கிக்கொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, இந்தியாவை பாரதம், ராஷ்டிரம் என்று கூறிவந்த நிலையில், தற்போது மத்திய பா.ஜ.க அரசு இந்தியாவைப் பாரதம் எனக் குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பா.ஜ.க-வின் இந்தச் செயலுக்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து இதற்கு கடுமையான எதிர்ப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில், இந்தியாவின் பெயர் `பாரதம்’ என்று பா.ஜ.க அரசு அதிகாரபூர்வமாக மாற்றப்போவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சிகளின் `இந்தியா’ (I.N.D.I.A) கூட்டணியைக் குறிப்பிட்டு, “தேர்தலில் `இந்தியா’ என்ற சொல்லே பா.ஜ.க-வை விரட்டும்” என்று பா.ஜ.க-வைச் சாடியிருக்கிறார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு I.N.D.I.A என்று பெயர் சூட்டியதிலிருந்து, பா.ஜ.க-வுக்கு `இந்தியா’ என்ற சொல்லே கசந்துவருகிறது.

முதல்வர் ஸ்டாலின்

இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப்போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியால், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு `இந்தியா’ என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது. `அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பதைப்போல, `இந்தியா’ என்ற சொல்லே பா.ஜ.க-வை மிரட்டுகிறது. தேர்தலில் `இந்தியா’ என்ற சொல்லே பா.ஜ.க-வை விரட்டும்” என்று பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.