ஆனந்த விகடனும் King Maker IAS அகாடமியும் இணைந்து பல இடங்களில் UPSC/TNPSC தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி முகாமை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது.

பயிற்சி முகாம்

அதைப் போல் வருகிற ஆகஸ்ட் 27 ஆம் தேதி UPSC/TNPSC தேர்வுகளை எதிர்கொள்வதற்கான இலவசப் பயிற்சி முகாமை சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடத்தவிருக்கிறது. அது மட்டுமின்றி ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் அன்று நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்விற்கு அனுமதி இலவசம். இந்த நிகழ்வில் மாணவர்களுக்காக உரையளிப்பதற்கு சிறப்பு திட்டச் செயலாக்கத்துறை செயலாளர் திரு. தாரேஷ் அகமது ஐ.ஏ.எஸ், ஓய்வு பெற்ற முன்னாள் டி.ஜி.பி Dr. எம்.ரவி, போட்டித் தேர்வு பயிற்றுநர் Dr.சங்கர சரவணன், King Makers IAS அகாடமியின் இயக்குநர் திரு.சத்ய ஸ்ரீ பூமிநாதன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இது தொடர்பாக போட்டித் தேர்வு பயிற்றுநர் Dr.சங்கர சரவணனிடம் பேசினோம். போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான முக்கியத் தகுதிகள் குறித்து விரிவாக பேசினார். அவர்,” இன்றைய காலகட்டத்தில் UPSC/TNPSC போன்றத் தேர்வுகளில் போட்டிகள் அதிகமாக இருக்கின்றன. இந்தப் போட்டிகளை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும். போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டு அதில் வெற்றியடைய வேண்டுமென மாணவர்கள் ஆர்வமுடன் முன் செல்ல வேண்டும். இது போன்ற முகாமை நடத்தும் போது மாணவர்களுக்கு அன்று மட்டும் அதிகளவில் ஊக்கமுடன் இருப்பார்கள். அந்த ஊக்கம் மாணவர்களுக்கு அனைத்து நாட்களிலும் இருக்க வேண்டும். உள்ளார்ந்த ஆர்வம் நிச்சயம் மாணவர்களை வெற்றி பெறச் செய்யும். அரசுப் பணிக்கும் தனியார் நிறுவனப் பணிக்கும் பல வேறுபாடுகள் இருக்கிறது. அரசுப் பணிகள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர் முன் வந்தால் பணிச் சிறக்கும். இதுபோன்ற போட்டித் தேர்வுகளை எதிர்கொள்பவர்களுக்கு பொறுமையும் விடாமுயற்சியும் மிகவும் அவசியம்.

சங்கர சரவணன்

இந்த போட்டித் தேர்வுகளுக்கு சில பாடத்திட்டங்கள் இருக்கிறது. அதனையும் முந்தைய வருடங்களில் நடைபெற்ற வினாத்தாள்களை வைத்தும் மாணவர்கள் பயிற்சி எடுத்துப் பார்க்க வேண்டும். இதற்கு வரலாறு, அறிவியல் மட்டுமின்றி சமீபத்திய நிகழ்வுகள் குறித்தும் விரிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். இன்றைய சூழலில் பலருக்கு சினிமாவிலும் விளையாட்டியில் அதிகளவில் ஆர்வமிருக்கும். அது குறித்து பல செய்திகளை தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால், அது மட்டும் போதுமானதல்ல. பொது அறிவு குறித்தும் அரசியல் நிகழ்வுகள் குறித்தும் ஆழமாகப் படிக்க வேண்டும். சிவில் சர்வீஸ் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு மொழித் தடை கிடையாது என்று பலர் கூறுவது மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்கு மட்டும் தான். UPSC பிரிலிம்ஸ் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் நடைபெறும். இதற்கு ஆங்கில மொழியறிவை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதன் பின் மெயின்ஸ் தேர்வைத் தமிழிலும் எழுதலாம். செய்தித்தாள்களை மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக அரசியல் மாற்றங்கள் குறித்தும் முக்கியத் திட்டங்கள் குறித்தும் மாணவர்கள் அதிகளவில் படிக்க வேண்டும். முக்கியமாக செய்தித்தாள்களின் தலையங்கத்தை மாணவர்கள் படிக்க வேண்டும்.” என கூறினார்.

முன்பதிவிற்கான லிங்க் இதோ !

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.