நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புராஜெக்ட் கே’ (Project K).  இந்த படத்திற்குப் படக்குழு  தற்போது ‘கல்கி 2898 AD’ என டைட்டிலை அறிவித்துள்ளனர்.  இதில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி மற்றும் தமிழ் நடிகர்களான கமல்ஹாசன், பசுபதி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். அதிக பொருட்செலவில் உருவாகிவரும் இந்த படம் ஒரு பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

பிரபாஸ்

இந்நிலையில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோவைப் பார்த்த இயக்குநர் ராஜமௌலி `கல்கி 2898 AD’ படக்குழுவைப் பாராட்டி ட்விட்டரில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவில், “நாகி (நாக் அஸ்வின்) மற்றும் வைஜெயந்தி மூவிஸ் மிகச்சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்.

ஒரு உண்மையான எதிர்காலம் சார்ந்த திரைப்படத்தை உருவாக்குவது என்பது மிகவும் கடினமான பணி. அதனை நீங்கள் சாத்தியமாக்கி இருக்கிறீர்கள். டார்லிங் (பிரபாஸ்) அட்டகாசமாக இருக்கிறார். ஒரே ஒரு கேள்வி மட்டும் எஞ்சியிருக்கிறது. படத்தின் ரிலீஸ் தேதி என்ன?” என்று ராஜமௌலி குறிப்பிட்டிருக்கிறார். 

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.