மாணவ, மாணவிகளிடையே உரையாடல்!

2023-2024-ம் ஆண்டுக்கான விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் தொடங்கியது. இதையடுத்து, விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் பா.சீனிவாசன் மாணவ, மாணவிகளிடையே உரையாற்றினார்.

தமிழ் ஊடக உலகின் பிரதான ஆளுமைகள் பலரின் முதல் படி, விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம். இந்தத் திட்டத்தின் 2023-24-ம் ஆண்டு படை தயாராகிவிட்டது. ஒரு கையில் பேனாவும், மறுகையில் ஸ்மார்ட்போனுமாக உற்சாகத்துடன் களமிறங்கியிருக்கிறது புதிய படை. இந்த ஆண்டு, திட்டத்துக்கு விண்ணப்பித்த 2,180 மாணவர்களில், பலகட்ட பரிசீலனைகளுக்குப் பிறகு 60 பேர் தேர்வுசெய்யப்பட்டிருக்கின்றனர். ‘360 டிகிரி’யில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவிருக்கும் இந்த இளைஞர்களுக்கான பயிற்சி முகாம் ஜூலை 22, 23 தேதிகளில் சென்னையில் நடக்கிறது. புதிய கனவுகள், இனிய இலக்குகளுடன் நெடிய பயணத்துக்கு இளையவர்களை வாழ்த்தி வரவேற்கிறான் விகடன்!

ஆசிரியர்

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ நிருபர்கள்

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ நிருபர்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ நிருபர்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ நிருபர்கள்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.