மார்ச் 28-ல் ஒரே நேர்கோட்டில் ஐந்து கிரகங்கள்.. வெறும் கண்களால் காணத்தவறாதீர்கள்!

வானத்தில் மார்ச் 28 ஆம் தேதி அரிய நிகழ்வாக பூமிக்கு மிக அருகில் ஐந்து கிரகங்கள் ஒரே நேரத்தில், ஒரே நேர்கோட்டில் வருவதால் அவற்றை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று வானிலை ஆய்வாளார்கள் தெரிவிக்கின்றனர்.

சமீப காலமாக வானத்தில் பல அரிய நிகழ்வுகள் தோன்றி வருகிறது. இந்நிலையில் நாளை அதாவது மார்ச் 28ம் தேதி மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு, மெர்குரி, வீனஸ், மார்ஸ், ஜூப்பிட்டர், யுரேனஸ், மூன் ஆகியவற்றை ஒரே நேர்கோட்டில் காணும் ஒரு அரிய நிகழ்வு நடைப்பெற இருக்கிறது. இது, வானவியல் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும்.

image

இதில் மெர்குரி(புதன்) அளவில் சிறியது . ஆகவே, டெலஸ்கோப்பின் உதவியுடன் நன்றாக பார்க்கலாம். வீனஸ்(வெள்ளி) இது மிகவும் பிரகாசமாகத் தெரியும். மார்ஸ்(செவ்வாய்) இது சிவப்பு நிறத்தில் இருக்கும். ஜூபிட்டர் இதுவும் பிரகாசமாகத்தெரியும் யுரேனஸ் இது டெலஸ்கோப்பின் உதவியுடன் பார்ககலாம். அரிய நிகழ்வு நாளை மாலை 6 மணிக்கு மேல் வானத்தில் பார்க்கலாம், இத்தகைய நிகழ்வினை இந்தியாவின் எந்த இடத்திலிருந்தும் காணலாம்.

image

கலிஃபோர்னியா இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜியின் கணக்கீட்டு வானியற்பியல் நிபுணரான கேமரூன் ஹம்மல்ஸின் கூற்றுப்படி, இத்தகைய அரிய நிகழ்வினை வரும் வெள்ளிக்கிழமை வரை வானில் வெறும் கண்களால் பார்கலாம் என்றும் அதை தொடர்ந்து அடுத்த இரண்டு வாரங்கள் இவை பூமிக்கு அருகிலேயே தொடர்ந்து இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இத்தகைய அரிய நிகழ்வானது எப்போதாவது நிகழக்கூடியது, இவை வடக்கு, வடமேற்கில் அரைக்கோளங்களில் காணலாம் என்றார். இந்நிகழ்வானது நேர்கோட்டுப்பாதையில் சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை வானில் தெரியும் என்று ஹம்மல்ஸ் கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM