“நேற்று மாலையிலருந்து வரிசையில காத்திருக்கோம்”- சேப்பாக்கம் மைதானத்திலிருந்து ரசிகர்கள்!

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் தொடர் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணி முதல் தொடங்கியது.

ஐபிஎல் 2023, வரும் 31-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த சீசனில், சென்னை – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ள போட்டிகளில் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடங்குகிறது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் இந்த டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது. அதன்படி சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள இரண்டு டிக்கெட் கவுண்டர்களில் ஆஃப்லைனிலும், ஆன்லைனில் பேடிஎம் மற்றும் www.insider.in தளத்தின் வழியிலும் இன்று காலை 09.30 மணி முதல் டிக்கெட் விற்பனை தொடங்கியது. ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

image

டிக்கெட் விலை விவரம்..

சி/டி/இ லோயர் ஸ்டேண்ட் – ரூ.1,500 – கவுண்டர் விற்பனை
டி/இ அப்பர் ஸ்டேண்ட் – ரூ.3,000 – ஆன்லைன் விற்பனை
ஐ/ஜே/கே லோயர் ஸ்டேண்ட் – ரூ.2,500 – ஆன்லைன் மற்றும் கவுண்டர் விற்பனை
ஐ/ஜே/கே அப்பர் ஸ்டேண்ட் – ரூ.2,000 – ஆன்லைன் மற்றும் கவுண்டர் விற்பனை.

image

இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் சேப்பாக்கத்தில் விளையாடும் அனைத்து போட்டிகளின் விவரம்:

ஏப்ரல் 3- லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் – சேப்பாக்கம்
ஏப்ரல் 12 – ராஜஸ்தான் ராயல்ஸ் – சேப்பாக்கம்
ஏப்ரல் 21 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – சேப்பாக்கம்
ஏப்ரல் 30 – பஞ்சாப் கிங்ஸ் – சேப்பாக்கம்
மே 6 – மும்பை இந்தியன்ஸ் – சேப்பாக்கம்
மே 10 – டெல்லி கேபிடல்ஸ் – சேப்பாக்கம்
மே 14 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சேப்பாக்கம்

இந்த டிக்கெட் விற்பனைக்காக நேற்று மாலை முதலே ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் குவியத்தொடங்கினர். அப்படி அங்கு டிக்கெட்டுக்காக ரசிகரொருவர் இன்று காலை (8 மணியளவில்) நம்மிடையே கூறுகையில் “நாங்கள் நேற்று மாலை 5 மணியிலிருந்தே இங்கே காத்திருக்கிறோம். விடிய விடிய நின்றுகொண்டே இருக்கிறோம்” என்றார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM