நடிகை யாஷிகா ஆனந்த் மீது போடப்பட்ட பிடிவாரண்ட் தளர்த்தப்பட்டு, வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.

‘நோட்டா’, ‘ஜாம்பி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி, யாஷிகா ஆனந்த் தனது மூன்று நண்பர்களுடன் புதுச்சேரி சென்று விட்டு மீண்டும் சென்னை திரும்பி உள்ளார்.

அப்போது வரும் வழியில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு பகுதியில் அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் யாஷிகா ஆனந்தின்ன் நெருங்கிய தோழியான ஹைதராபாத்தை சேர்ந்த வள்ளி பவானி செட்டி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

image

மேலும் யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது இரு ஆண் நண்பர்கள் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக மாமல்லபுரம் காவல் நிலையத்தில் 130 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கின் மீதான விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் வாய்தா கடந்த மார்ச் 21 ஆம் தேதி வந்தபோது யாஷிகா ஆஜராகவில்லை. இதனால் கடந்த 23 ஆம் தேதி அவருக்கு பிடிவாரண்ட பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜரானார். அப்போது விசாரணை நடத்திய நீதிபதி, ‘ஏன் கடந்த 21ஆம் தேதி ஆஜராகவில்லை’ என கேட்டபோது, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஆஜராக முடியவில்லை என கூறினார். தொடர்ந்து அவரை வரும் ஏப்ரல் 25ஆம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா உத்தரவிட்டார். இதனால் அவர்மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் தளர்த்தப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.