”நிஜத்தை புதைச்சாலும் திமிறிக்கிட்டு வரும்”-மிரட்டும் வெங்கட் பிரபுவின் ‘கஸ்டடி’ பட டீசர்!

நாக சைதன்யா நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும், ‘கஸ்டடி’ படத்தின் டீசர் இன்று வெளியானது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்திருக்கும் படம், ‘கஸ்டடி’. இப்படத்தை வெங்கட் பிரபு நேரடியாக தெலுங்கில் இயக்கி உள்ளார். தமிழிலும் இப்படம் வெளியாகிறது. மே 12ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.

image

மேலும், அரவிந்த் சாமி, பிரியாமணி, சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திக்கு இசைஞானி இளையராஜா மற்றும் அவரது மகன் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். இந்தப் படத்தை ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. அண்மையில் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இன்று படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்‌ஷன் நிறைந்த இப்படத்தில், நாக சைதன்யா போலீஸாக அதிகாரியாக நடித்திருப்பதாகவும், அவருக்கே மாஸ் காட்டும் வில்லன் கேரக்டரில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளார்.

காயம்பட்ட மனசு ஒருத்தன எந்த எக்ஸ்ட்ரீமுக்கு வேணாலும் கொண்டுபோகும்… அது இப்போ, என்னைக் கொண்டு வந்து விட்டிருக்கிற இடம், ஒரு போர்க்களம். இங்கு சாவு, என்னைத் துரத்திக்கிட்ட இருக்குதுனு எனக்கு நல்லாவே தெரியும். ஆனா, அது எப்போ, எப்படி, எங்கிருந்து வருதுனு எனக்கு தெரியாது. தெரிஞ்சக்கவும் நான் விரும்பல. ஏன்ன்னா, நான் கையிலு எடுத்திருக்கற ஆயுதம் ஓர் நிஜம்… அந்த நிஜத்தை, நீங்க எவ்வளவு ஆழமா புதைச்சாலும் ஒருநாள் திமிறிக்கிட்டு வெளியில வந்தே தீரும்.

image

யெஸ். தட் ட்ரூத். இஸ் இன் மை கஸ்டடி” என பின்னணி குரலில் ஒலிக்கிறது, ‘கஸ்டடி’ டீசர். நாக சைதன்யாவின் சண்டைக் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. வில்லன் அரவிந்த் சாமியின் மாஸ் மூவ்மெண்ட்ஸ் ஈர்க்கிறது. நாயகி கீர்த்தி ஷெட்டிக்கும் சண்டைக்காட்சி கொடுக்கப்பட்டிருக்கிறது. எ வெங்கட் பிரபு ஹண்ட் என முடியும் அந்த டீசரே பட்டையைக் கிளப்புவதாக உள்ளது. தற்போது வரை அந்த டீசர் 2,51,000 பார்வைகளையும், 27,000 லைக்ஸ்களையும், 600க்கும் மேற்பட்ட கமெண்ட்ஸ்களையும் பெற்றுள்ளது.

– ஜெ.பிரகாஷ்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM