லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வருகிறது தளபதி 67. இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான், கவுதம் மேனன், ப்ரியா ஆனந்த் என பல நட்சத்திர பட்டாளங்களே நடிக்கின்றனர். கொடைக்கானல் படபிடிப்பிற்கு பிறகு தற்போது தளபதி 67 படக்குழு காஷ்மீரில் அடுத்தகட்ட ஷெடுயூலை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், பிப்ரவரி 1, 2 மற்றும் 3ம் தேதிகளில் தொடர்ந்து தளபதி 67 குறித்த அப்டேட்கள் வெளிவரும் என லோகேஷ் கனகராஜ் மைக்கேல் பட நிகழ்ச்சியின் போது கூறியிருந்தார். அதன்படி நேற்றிலிருந்தே தளபதி 67 பற்றிய அப்டேட்களை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ வெளியிட்டு வந்தது. அதில் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் பட்டியல் இடம்பெற்றிருந்தது.

இதற்கடுத்தபடியாக தற்போது படத்தின் பூஜை குறித்த போட்டோவையும், அதன் வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்தியிருக்கிறது படக்குழு. அதில் விஜய், லோகேஷ், த்ரிஷா, அர்ஜூன், ப்ரியா ஆனந்த், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோரும் பங்கேறிருந்திருக்கிறார்கள்.

தளபதி 67 பூஜை வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு ட்ரெண்டிங்கில் இணைந்திருக்கிறது. ஏற்கெனவே #Thalapathy67 , #Thalapathy67Cast போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

படத்தின் பூஜை வீடியோவுக்கு அடுத்தபடியாக நாளை என்ன அப்டேட் விடுவார்களோ என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். விக்ரம் படத்துக்கு ப்ரோமோ வீடியோ வெளியிட்டதை போல தளபதி 67-க்கு எப்போ ப்ரோமோ வெளியிடுவார்கள் என்று ஆவலோடு ரசிகர்கள் பதிவிட்டும் வருகிறார்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.