மாரடைப்பால் உயிரிழந்த இளம் ரசிகர் – நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி

சென்னையில் இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்த தனது ரசிகரின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு நடிகர் கார்த்தி ஆறுதல் தெரிவித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்தியின் மக்கள் நல மன்றத்தின் தென் சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளராக இருந்த 29 வயதான வினோத் என்ற ரசிகர் சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். இதையறிந்த நடிகர் கார்த்தி, திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று வினோத்தின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் வினோத்தின் குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.


கடந்த ஆண்டு வெளியான ‘விருமன்’, ‘பொன்னியின் செல்வன் – 1’, ‘சர்தார்’ என அடுத்தடுத்த 3 படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக ‘ஜப்பான்’ என்றப் படத்தில் நடிகர் கார்த்தி நடித்து வருகிறார். ‘ஜோக்கர்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராஜுமுருகன் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். கார்த்தியின் 25-வது படமான இந்தப் படத்தில் அனு இமானுவேல் நாயகியாக நடிக்கிறார். மேலும், மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் -2’ படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ள நிலையில் இந்தப் படம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி வெளியாக உள்ளது.


Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM