செல்ஃபோன் பேசியப்படியே பைக் ஓட்டிய இளைஞர் – சென்டர் மீடியனில் மோதி நடந்த துயரம்!

சின்னசேலம் அருகே செல்ஃபோனில் பேசிக்கொண்டு வந்த இளைஞர் நிலைத்தடுமாறி சென்டர் மீடியனில் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த நித்தீஷ் என்பவர் சென்னைக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள அம்மையகரம் பகுதியில் செல்ஃபோனில் பேசியபடி இருசக்கர வாகனத்தில் நித்தீஷ் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது நிலை தடுமாறி நித்தீஷ் ஒட்டிச்சென்ற இருசக்கர வாகனம் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

image

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சின்ன சேலம் போலீசார், நித்தீஷ்சை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நித்தீஷிற்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்தப்போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து உயிரிழந்த நித்தீஷ் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சின்னசேலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM