ஆயிரம் எதிரிகளை சமாளித்து விடாலம். ஆனால், ஒரு துரோகியை சமாளிப்பது தான் சங்கடம் என எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ பேசிய போது…

அதிமுக என்று கூறி சிலர் வேஷம் போட்டு வருகின்றனர். நானும் ரௌடி தான் என்று நடிகர் வடிவேல் நகைச்சுவை காட்சியில் பேசுவது போன்று பேசி வருகின்றனர். சின்னம், கொடி, தொண்டர்கள் எங்களை விட்டு எங்கும் போக மாட்டார்கள், மக்களும் எங்கள் பக்கம் தான் என்றும், எடப்பாடி பழனிச்சாமியை தொண்டர்கள் ஏற்றுக்கொண்டது போல, அவரை நாட்டு மக்களும் ஏற்றுக் கொண்டார்கள்.

image

ஈரோடு கிழக்கு தேர்தல் களம் ரெடி, வேட்பாளாரும் ரெடி, எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார். அதிமுக கட்சி ஆரம்பித்து 100-வது நாளில் திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றது. இரட்டை இலை சின்னம் வந்தாலும், வர தாமதம் ஏற்பட்டாலும் வெற்றி பெறப் போவது அதிமுக தான். அன்றைக்கு திண்டுக்கல் இன்றைக்கு ஈரோடு கிழக்கு.

அதிமுகவை இன்றைக்கு காப்பாற்றி வருவது எடப்பாடி பழனிசாமி தான். ஆயிரம் எதிரிகளை சமாளித்து விடாலம். ஆனால், ஒரு துரோகியை சமாளிப்பது தான் சங்கடம். கட்சிக்கு ஒரே தலைமை அது எடப்பாடி பழனிசாமி என்ற நிலைப்பாட்டினை 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக எடுத்து இருந்தால் அதிமுக ஆட்சிக்கு வந்திருக்கும். இரட்டை இலையை வீழ்த்த எந்த சக்தியும் இல்லை, இரட்டை இலை நிச்சயமாக கிடைக்கும்.

image

திண்டுக்கல் இடைத்தேர்தல் எப்படி ஒரு திருப்புமுனையாக அதிமுகவிற்கு இருந்ததோ, அதே போன்று இன்றைக்கு ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் திருப்பு முனையாக அமையும். நல்ல நாள் இன்று அமாவாசை நாளில் திமுக பிரச்சாரம் ஆரம்பித்துள்ளது. இனி திமுகவிற்கு வெளிச்சமே கிடையாது. அமாவாசை சென்டிமெண்ட் திமுகவிற்கு ஓர்க்-அவுட் ஆகாது. அது அதிமுகவிற்கு தான்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும், அதன் பின்னர் இந்தியாவின் பார்வை அதிமுக பக்கம் வரும். அதோடு பிணி, அணி எல்லாம் முடிந்து போய் விடும். மக்களை மட்டுமல்ல, சட்டமன்ற உறுப்பினர்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார். சட்டமன்ற தொகுதிக்கு 10 கோரிக்கைகள் கொடுத்த பிறகும் அதனை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மு.க.ஸ்டாலின் இடைக்கால முதல்வர் தான். ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் என்று பேசினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.