இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உஷா ரெட்டி, அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உள்ள மாநில செனேட்டராக பதவியேற்றிருக்கிறார்.

எலான் மஸ்க்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் , அதன் செயற்கைக்கோள்கள் மூலம் இயங்கும் இணையச் சேவையான ஸ்டார்லிங்க் (Starlink) சேவையை, தென் கொரியாவில் தொடங்கவிருக்கிறது.

புகழ்பெற்ற ராப் கலைஞரான கேன் வெஸ்ட்(Kayne west), கட்டட வடிவமைப்பாளரான பியான்கா சென்சோரியை (Bianca Censori) திருமணம் செய்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கேன் தன் முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க சுதந்திரப் போராட்ட வீராங்களையான ஃப்ரீன் கின்வாலா (Frene Ginwala) தனது 90-வது வயதில் உயிரிழந்தார். 1994-ல் நெல்சன் மண்டேலா ஜனாதிபதியான பிறகு, தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத்தில் முதல் உரையாற்றிய சபாநாயகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டொனால்ட் ட்ரம்ப்

தவறான பொருளாதார தரவுகளை வெளியிட்டு, வரி மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிறுவனத்துக்கு, 1.6 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

உக்ரைனின் தொழில்நுட்ப கட்டமைப்பை மேம்படுத்தத் தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக தைவான் தெரிவித்திருக்கிறது.

ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் கெவின் ஸ்பேஸி தனக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்ட பாலியல் வழக்குகளில், தான் குற்றமற்றவர் என்று லண்டன் நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்.

உலக பொருளாதார மன்றம், ஸ்விட்சர்லாந்தில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கிறது. இதில் புகழ்பெற்ற தொழிலதிபர்கள் மற்றும் பல நாடுகளின் அரசு அதிகாரிகள் பங்கு பெறவிருக்கின்றனர்.

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் அரசுக்குச் சொந்தமான சாதனங்களில் டிக்டாக் செயலி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, அந்நாட்டின் டிக்டாக் தடைசெய்யப்பட்ட மாகாணங்களின் எண்ணிக்கை 20 -ஆக உயர்ந்திருக்கிறது.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவரும், ஹாலிவுட் சினிமாவில் பிரபல பாடகியுமான லிசா மேரி பிரெஸ்லி (Lisa Marie Presley) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 54 வயதான இவர், சமீபத்தில் நடைபெற்ற கோல்டன் குளோப் விழாவில் பங்கேற்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.