சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தை சாதரணமாக கடந்து கூடலூர் நோக்கி வரும் PM-2 மக்னா யானையை தடுத்து நிறுத்த முதுமலை வனத்துறையினர் போராடி வருகின்றனர்.

கூடலூரில் கடந்த 8 ஆம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட PM-2 மக்னா யானை கூடலூரில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சீகூர் அடர் வனப்பகுதிக்குள் விடப்பட்டது. சீகூர் வனப்பகுதி சத்தியமங்கலம் வனப்பகுதியை ஒட்டி இருக்கிறது. அந்த வனப்பகுதி PM-2 மக்னா யானைக்கு அறிமுகமில்லாத இடம் என்பதால், அங்கிருந்து அதனால் திரும்பி கூடலூருக்கு வர முடியாது என வனத்துறையினர் நம்பினர். அந்த நம்பிக்கையோடு கடந்த 10 தினங்களாக சீகூர் வனப்பகுதிக்குள் சுற்றித்திரிந்த மக்னா யானையை அதன் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த ரேடியோ காலர் கருவி உதவியுடன் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி சீகூர் வனப்பகுதியில் இருந்து கூடலூர் வனப்பகுதியை நோக்கி அந்த யானை நகர துவங்கியது. மற்றொரு ஆண் காட்டு யானையின் உதவியோடு PM-2 மக்னா யானை கூடலூரை நோக்கி வந்தது.

image

யானை வரும் வழியில் 8 கும்கி யானைகளை நிறுத்தியும், பல்வேறு இடங்களில் தீ மூட்டியும் அதனை வனத்துறையினர் தடுக்க முயன்றனர். 50க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள் மக்னா யானையை மீண்டும் சீகூர் வனப்பகுதியை நோக்கி விரட்டும் முயற்சியிலும் கடந்த இரண்டு தினங்களாக ஈடுபட்டனர். ஆனால் வனத்துறையினரின் கடுமையான பாதுகாப்பையும் மீறி நேற்று இரவு 9 மணி அளவில் தெப்பக்காடு பகுதியில் உள்ள ஆற்றைக் கடந்த PM-2 மக்னா யானை, தெப்பக்காடு வனப்பகுதிக்குள் வந்து சேர்ந்தது. தற்சமயம் யானை தமிழக – கர்நாடக எல்லையில் உள்ள கக்கநல்லா பகுதியில் உள்ளது. அங்கிருந்து அந்த யானையால் கூடலூரில் உள்ள ஸ்ரீ மதுரை அல்லது தேவர்சோலை பகுதிகளுக்கு எளிதாக வந்து விட முடியும். இருப்பினும் அங்கிருந்து யானை இந்த பகுதிகளுக்கு வராமல் தடுக்க வனத்துறையினர் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

ஆனால் வனத்துறையினர் மேற்கொள்ளக்கூடிய எந்த முயற்சிகளும் தற்போது வரை பலனளிக்காமல் உள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் மக்னா தான் பிடிக்கப்பட்ட கூடலூர் பகுதிக்கு மீண்டும் வருவதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இந்த நிலையில் தனக்கு சற்றும் அறிமுகம் இல்லாத சீகூர் பகுதியில் இருந்து எப்படி இந்த யானை கடந்து கூடலூர் வனப்பகுதி நோக்கி வருகிறது என்ன புரியாமல் வனத்துறையினர் குழப்பத்தில் உள்ளனர்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.