காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க  தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டில் மேலும் ஒரு முயற்சியாக காலநிலை மாற்ற இயக்கம் ஒன்றையும் தமிழக அரசு உருவாக்கியுள்ளது.

சென்னை எம்ஆர்சி நகரில் அமைந்துள்ள (லீலா பேலஸ்) தனியார் விடுதியில் தமிழ்நாடு சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை சார்பில் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 2022 மற்றும் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் தொடக்க விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது.

காலநிலை மாற்ற இயக்கத்தின் மூலம் தமிழ்நாட்டை  காலநிலைக்கு ஏற்ற மாநிலமாக மாற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் காலநிலை வல்லுநர்கள் விவாதித்தனர். மேலும், காலநிலை மாற்ற இயக்கத்தின் ஒரு முயற்சியாக தமிழகத்தில்  25 அரசு பள்ளிகள் தன்னிறைவு பெற்ற பசுமை பள்ளிகளாக மாற்றம் செய்வதற்கு தமிழக அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் கடலோரத்தில் அமைந்திருப்பதால் அங்கு ஏற்படும் காலநிலை மாற்றத்தை தடுக்க இயற்கை முறையிலான பயோ ஷீல்ட் என்ற புதிய யுக்தியை தமிழக அரசு ஏற்படுத்த உள்ளதாக முடிவு செய்யப்பட்டது.

இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். இந்த நிகழ்வின்போது தமிழ்நாடு அமைச்சர்கள் பொன்முடி, சிவ.வீ. மெய்யநாதன், பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், ராமச்சந்திரன், முபெ சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

image

அமைச்சர் மெய்யாநாதன் மேடையில் பேசுகையில், தமிழ்நாடு காலநிலை மாற்றம் இயக்கத்தை தொடங்கியதும் தமிழக முதலமைச்சர் இதற்காக 500 கோடி ஒதுக்கீடு செய்தார். மேலும், தமிழகத்தில் உள்ள 25 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு பசுமைப் பள்ளிகளாக மாற்ற போவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்சாரம் இல்லாமல் சூரிய ஒளியை பயன்படுத்தி மின்சாரத்தை உபயோகம் செய்து கொள்ள முடியும். தமிழகத்தில் உள்ள மலை சார்ந்த மாவட்டங்களில் பெட்ரோல் டீசல் போன்றவை பயன்படுத்தாமல் தவிர்ப்பதற்காக மாற்று வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக சுற்றுச்சூழல் மாசு ஏற்படாது. உலகிலேயே எந்த ஒரு நாடும் எடுக்காத முயற்சியை நமது தமிழ்நாட்டு முதல்வர் எடுத்து அதில் வெற்றி கண்டுள்ளார். சுற்றுச்சூழலை பாதுகாப்பதை உலகத்திற்கே உணர்த்துகிற மாநிலமாக தமிழ்நாடு தற்பொழுது உள்ளது. தமிழகத்தில் பசுமை தமிழகம் என்கின்ற திட்டத்தினை தொடங்கியதன் காரணமாக பல கோடி மரங்கள் நட செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

image

தமிழக முதலமைச்சர் மேடையில் பேசுகையில், தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கும் மட்டுமல்ல உலகத்திற்கு இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது. ஐநாவின் பொறுப்பாளர்களை வைத்து இந்த மாநாடு நடக்கிறது. குறிப்பாக என் வாழ்க்கையின் கடமையாக காலநிலை மாற்றத்தை நான் பார்க்கிறேன். “நீர் இன்றி அமையாது உலகு” என்ற வள்ளுவனின் வாக்கிற்கேற்ப இந்த பணிகளை நடத்தி வருகிறோம். அதிக வெயில், அதிக மழைப்பொழிவு, குறைவான மழைப்பொழிவு, புது வகை நோய்கள், மண் மாசு மட்டும் அல்ல பெங்களூர், தெலுங்கனா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்படும் காலநிலை பிரச்சனைக்களுக்கும் தீர்வு காண இந்த மாநாடு நடைபெறுகிறது. கடந்த முறை நடந்த உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையை பார்க்கும்பொழுது இந்த பிரச்சனையின் வீரியம் அனைவருக்கும் புரிய வந்தது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் தமிநாட்டில் மரம் 21 விழுக்கடுகளில் இருந்து 31 விழுக்கடுகளாக உயர்த்தி இருக்கிறோம். 10 கிராமங்களை பசுமையான மறுசுழற்சி கொண்ட மீள் தன்மை உள்ள மாநிலங்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்த படுகிறது. கடற்கரையில் மரங்களை வளர்க்கும் திட்டம் செயல்ப்படுகிறது. கடல்பசு மற்றும் தேவாங்கு போன்ற அறியவகை உயிரினங்கள் பாதுகாக்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பசுமை திட்டங்கள் மூலம் காற்றலை சோலார் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன் காரணமாக தமிழ்நாடு சூழியலில் சிறந்து விளங்கும். சுற்றம் காப்போம் சூழலை காப்போம் மண்ணை காப்போம் பண்பாடை காப்போம் என்று தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.