திருமணம் என்பது கொண்டாட்டமாக மாறியதிலிருந்து ஒவ்வொருவரும் அவர்களின் சக்திக்கேற்றவாறு அதை நினைவுகளாக மாற்றிக்கொள்கிறார்கள். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்த மணமக்கள், தங்கள் திருமணத்துக்கு விமானம் மூலம் உறவினர்களை அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ஸ்ரேயா ஷா எனும் டிஜிட்டல் கிரியேட்டர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். தன்னுடைய சகோதரி திருமணத்துக்காக ஸ்ரேயா விமானத்தில் பயணித்திருக்கிறார். அந்த விமானத்தில் ஸ்ரேயாவுடன் பயணித்தவர்கள் அனைவரையும், அவர் தன்னுடைய உறவினர்கள் எனக் கூறி வீடியோவில் அறிமுகப்படுத்துகிறார். அனைவரும் ஸ்ரேயாவின் கேமராவைப் பார்த்து உற்சாகமாக கை அசைக்கிறார்கள்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு கீழே பலரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். `திருமணத்துக்காக முழு விமானத்தையும் புத்திசாலித்தனமாக முன் பதிவு செய்தவர்களுக்கு வாழ்த்துகள்’ எனவும், `ஓஹோ இதுக்கு பேர்தான் கல்யாணத்துக்கு குடும்பமா போறதோ’ எனவும் இணையவாசிகள் வீடியோவுக்கு கமென்ட் செய்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ 7 லட்சம் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.