மாரடைப்பால் இறந்தவரின் சிகிச்சைக்கு 35,000 ரூபாய் பெற்றுகொண்ட நிலையில், அவர் இறந்துவிட்டபின்னர் கூடுதலாக 2 லட்சம் ரூபாய் கட்ட சொன்னதால் உறவினர்களால் மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள வயலோகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (52). இவர் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார்.‌ மனைவி, இரண்டு மகன்களுடன் வசித்து வந்த அவர், திருவிழா தொடர்பான ஒரு கூட்டத்திற்கு சென்றபோது கூட்டத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை நேற்ற (22-10-2022) மதியம் 2:30 மணிக்கு புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் ரமேஷின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்களும் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் ரமேஷை பரிசோதனை செய்துவிட்டு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் உடனடியாக ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

image

இதனையடுத்து ரமேஷ்-ன் குடும்பத்தினர் ஆஞ்சியோ செய்ய சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து ரமேஷுக்கு ஆஞ்சியோ சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மேற்கொண்டதாக கூறப்படுகின்றது. அப்போது ரமேஷ் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு சென்றதாக மருத்துவர்கள் ரமேஷ்சின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்து விட்டு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் சற்று நேரத்தில் ரமேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ்-ன் குடும்பத்தினரும் உறவினர்களும் கதறி அழுதுள்ளனர்.

image

இந்நிலையில் தனியார் மருத்துவமனை நிர்வாகம் ரமேஷின் உடலை உறவினர்களிடம் கொடுக்க அவருக்கு சிகிச்சை மேற்கொண்டதற்காக ரூபாய் 2 லட்சத்து 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று ரமேஷின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தனியார் மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சை மேற்கொள்ள 35 ஆயிரம் ரூபாய் கட்டிய நிலையில் மேலும் 2.10 லட்சத்தை கட்ட வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் ரமேஷின் குடும்பத்தினர் மாலை 4 மணி முதல் தவித்து வந்துள்ளனர். பின்னர் இரவில் ரமேஷின் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும் அவரது உறவினர்களும் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை முன்பு திரண்டு மருத்துவமனை கேட்கும் அவ்வளவு தொகையை கட்ட முடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்ட சூழலில் உயிரிழந்த ரமேஷின் உறவினரோடு மருத்துவமனை நிர்வாகம் நடத்திய பேச்சு வார்த்தையின் அடிப்படையில் குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்டு ரமேஷின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

image

இதுகுறித்து நாம் அந்த மருத்துவமனையின் மேலாளர் வினோத்திடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட நோயாளி ரமேஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு தங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உயிரை காப்பாற்ற இருதயவியல் மருத்துவர்கள் தொடர்ந்து போராடி வந்ததோடு, இரண்டு சென்ட் மற்றும் பேஜ் மேக்கர் கருவிகளையும் பொருத்தி அவரது உயிரை காப்பாற்ற முயன்றனர். இருந்தபோதிலும் அவரது இதயத்தில் அடைப்புகள் அதிகமாக இருந்ததால் எவ்வளவு முயன்றும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போனது.

image

இந்நிலையில் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட செலவுத் தொகையை மட்டுமே மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கேட்கப்பட்டது. ஆனால் அதனை கொடுக்க அவரது உறவினர்கள் மறுத்த நிலையில் ஸ்டண்ட் மற்றும் பேஜ் மேக்கர் கருவிகளுக்கான தொகையை மட்டும் பெற்றுக் கொண்டு ரமேஷிசின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளோம். இந்த விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகம் கூடுதலாக ஒரு ரூபாய்க்கு கூட எந்தவிதமான பணமும் கேட்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.