நடிகர் தனுஷின் தமிழ், தெலுங்குப் படமான ‘வாத்தி’  திரையரங்கு வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கத்தில், தமிழில் ‘வாத்தி’ என்றும், தெலுங்கில் ‘சார்’ என்றும் பெயரிடப்பட்டுள்ள படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இருமொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்துள்ளது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், மொட்டை ராஜேந்திரன், பிரவீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

image

இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் ஆசிரியராக நடிக்கிறார். கல்வியை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவராகவும், மாஃபியா கும்பலை எதிர்த்து போராடுபவராகவும் நடிகர் தனுஷ் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது. வருகிற டிசம்பர் மாதம் 2-ம் தேதி உலகம் முழுவதும் இந்தப் படம் வெளியிட உள்ளதாக புதிய போஸ்டருடன் படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தநிலையில், தற்போது 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ம் தேதிக்கு படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது.


Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.