சமந்தாவின் ‘யசோதா’ திரைப்பட ட்ரெய்லரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் இன்று வெளியிட உள்ளனர்.

தென்னிந்தியாவின் பிரபல நடிகையான சமந்தா, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதையிலும், வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்தும் நடித்து வருகிறார். ‘பேமிலி மேன்’ வெப் சீரிஸில் சர்ச்சைக்குள்ளான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்த சமந்தா, அடுத்ததாக அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ முதல் பாகத்தில் ‘ஊம் சொல்றியா’ பாடலுக்கு நடனமாடி, ரசிகர்களை கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர்கள் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா ‘யசோதா’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இப்படத்தின் டைட்டில் லுக்கை வெளியிட்டு படப்பிடிப்பைத் துவங்கியது படக்குழு. இந்தப் படத்தில் சமந்தா எழுத்தாளராக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன், வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏற்கனவே த்ரில்லர் காட்சிகளுடன் வெளியான இந்தப் படத்தின் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இந்தப் படத்தின் ட்ரெயிலர் இன்று மாலை 5.36 மணிக்கு வெளியாகிறது.

image

பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெயிலரை தமிழில் சூர்யாவும், தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவும், கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டியும், மலையாளத்தில் துல்கர் சல்மானும், இந்தியில் வருண் தவானும் வெளியிடுகின்றனர். மணிசர்மா இசையமைத்துள்ள இந்தப் படம் வருகிற நவம்பர் மாதம் 11-ம் தேதி வெளியாகிறது. மேலும் சமந்தா சகுந்தலை கதாபாத்திரத்தில் புராண கதைக்களத்தில் நடித்துள்ள ‘சாகுந்தலம்’ திரைப்படமும் விரைவில் வெளிவர இருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.