கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலம் பெற்று வீடு திரும்பியநிலையில், கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநரான பாரதிராஜா நீர்சத்து குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், “பாரதிராஜாவிற்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடல்நிலை சீராக உள்ளது. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்” இவ்வாறு தெரிவித்திருந்தது.

image

15 நாட்களுக்கும் மேலாக சிகிச்சையில் இருந்ததின் பயனாக அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வீடு திரும்பினார். மேலும் இயக்குநர் பாரதிராஜா வீடு திரும்பியதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அத்துடன் மருத்துவமனையிலும் பாரதிராஜாவின் வீட்டிற்கும் சென்று பிரபலங்கள் பலர் நலம் விசாரித்தனர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், பாராதிராஜா குறித்து ட்வீட் செய்துள்ளார்.



Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.