‘இரவின் நிழல்’ திரைப்படம், இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்படாதநிலையில் இதுகுறித்து இயக்குநர் பார்த்திபன் ட்வீட் செய்துள்ளார்.

40 வருடத்திற்கும் மேலாக, தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும் வெற்றிகரமாக இயங்கி வருபவர் பார்த்திபன். புதுமை விரும்பியான இவர், தனது படங்கள் மூலமாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், இவர் இயக்கி, தயாரித்து, நடித்த ‘ஒத்த செருப்பு அளவு 7’ என்ற படம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. ஏனெனில் பார்த்திபன், இந்தப் படம் முழுவதும் தனி ஒருவராக நடித்து வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டிருந்ததால், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும், சென்ற ஆண்டுக்கான தேசிய விருதையும் இந்தப்படம் தட்டிச் சென்றது. இந்தப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பார்த்திபன் ‘இரவின் நிழல்’ என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். ஒரு மணி நேரம் 34 நிமிடங்கள் 36 வினாடிகள் ஓடக்கூடிய இந்தப்படம், முதன்முதலாக நான் லீனியர் முறையில் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர், பிரிகிடா சகா, அனந்த கிருஷ்ணன், ரேகா நாயர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

image

கடந்த ஜூலை 15-ம் தேதி வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் 2023-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அதிகாரபூர்வமாக அனுப்பப்படும் படமாக இந்தப் படம் தேர்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘செலோ ஷோ’ ( Last Film Show aka Chhello Show) தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகர் பார்த்திபன் ட்வீட் செய்துள்ளார்.

அதில், “மகிழ்ச்சி!எந்த extra சிபாரிசும் தேவையில்லாமல் ஆஸ்காருக்கு இந்தியாவிலிருந்து அனுப்ப தகுதியான ஒன்றிரண்டு படங்களில் ஒன்று ‘Last film show’ குஜராத்தி படம்.(cinema paradiso பாதிப்பில்) Film to digital என்ற விஞ்ஞான வளர்ச்சியில் சிக்குண்ட சில உள்ளங்களில் என்னுடையதும் ஒன்று! அதை ஒரு சிறுவனை வைத்து நம் இதயத்தை சில்லு சில்லாக உடைத்து,கடைசியில் the light of HOPE’அவன் கண் வழிய நாம் காணும்படி செய்த இயக்குனர் mr pan Nalin அவர்களுக்கு வாழ்த்துகள்.திறமை எங்கிருந்தாலும் அதை உலகின் முதல் ஆளாய் திறந்த மனதோடு வரவேற்று வாழ்த்த வேண்டும்!!!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.