தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை உள்ள நிலையில்,  கேரள லாட்டரிகள் தமிழக எல்லைப்பகுதிகளான குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு வழியாக தேனி மாவட்டத்துக்கு விற்பனை வருகிறது. இங்கிருந்து மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கும் விற்பனை நடைபெற்று வருகிறது. இதுமட்டுமில்லாது குமுளியை மையமாகக் கொண்டு ஆன்-லைன், நம்பர் லாட்டரி விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது.

பம்பர் பரிசுக்கான லாட்டரி சீட்டு

இத்தகையச் சூழலில், குமுளியிலிருந்து சென்னை, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு லாட்டரி சீட்டு விற்பனை நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் போதைப்பொருள்கள் கொரியர் மூலம் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, போலீஸார் கொரியர் நிறுவனங்களை கண்காணித்து வந்தனர். அதன்படி, குமுளியிலிருந்து கொரியர் மூலம் லாட்டரி விற்பனை நடப்பதை போலீஸார் கண்டறிந்தனர். 

இதில் குமுளியில் 12 கடைக்காரர்கள் தமிழகம் முழுவதும் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துவந்தது தெரியவந்ததுள்ளது. அதையடுத்து, அவர்களிடமிருந்து ரூ.3,14,780 மதிப்புள்ள 3,511 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கொரியர் மூலம் லாட்டரி விற்ற 21 பேர்மீது குமுளி போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர். தேனி மாவட்டம், அல்லிநகரத்தைச் சேர்ந்த செளந்தரராஜன் 38 என்பவரைக் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

குமுளி போலீஸார்

இது குறித்து குமுளி போலீஸாரிடம் விசாரித்தோம். “தமிழக-கேரள எல்லைப்பகுதியான குமுளியில் அதிக லாட்டரி கடைகள் உள்ளன. ஆனால் இப்பகுதியில் தமிழர்கள்தான் அதிகம் உள்ளனர். குறிப்பாக தினசரி தேனி மாவட்டத்திலிருந்து குமுளி வந்து செல்வோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் லாட்டரி தடை உள்ளதால், இங்கிருந்து லாட்டரி வாங்கிச் சென்று தமிழகப் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது.

செளந்தரராஜன்

இதை போலீஸார் ஓரளவுக்கு கண்காணித்து கட்டுப்படுத்த முடியும். இந்நிலையில் பல ஆண்டுகளாகவே கேரள லாட்டரி கொரியர் மூலம் தமிழகத்தில் விற்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா காலத்திலும்கூட இந்த விற்பனை தொடர்ந்து நடந்திருக்கிறது. பிரபல கொரியர் சர்வீஸ் மூலமாக திருச்சிக்குதான் அதிக லாட்டரிகள் அனுப்பப்பட்டிருக்கின்றன” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.