தட்டச்சுக் கருவியின் அனுபவம் பற்றி 80 களில் பிறந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். இப்போது எலெக்ட்ரானிக் கீபோர்ட்கள் வந்துவிட்டதால் பழைய தட்டச்சுக் கருவிகளின் பயன்பாடுகள் முற்றிலும் குறைந்துவிட்டது.

என்னதான் இன்று சிறிய சத்தம்கூட இல்லாமல் டைப் செய்யும் கீபோர்ட் வந்தாலும் ஒவ்வொரு முறை விரல்களால் அழுத்தும்போதும் அதிலிருந்து வரும் சத்ததைக் கேட்டுக்கொண்டே யார் சத்தம் அதிகமாக வருகிறது என்று போட்டி போட்டு அடிப்பதில் ஒரு பெரும் மகிழ்ச்சி இருக்கும். இன்றும் பலருக்கு இது போன்ற தட்டச்சுக் கருவிகளில் வார்த்தைகளை அடிப்பது மிகவும் பிடிக்கும். ஆனால் பழைய தட்டச்சுக் கருவிகள் இப்போது கிடைப்பதில்லை.

இந்நிலையில் மத்திய பிரதேசம் இந்தூரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மிகவும் பழமையான 400க்கும் மேற்பட்ட தட்டச்சுக் கருவிகளை சேகரித்து ‘டைப் ரைட்டர் அருங்காட்சியகம்’ ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த அருகாட்சியகத்தில் 1890ம் ஆண்டு முதல் 2000 வரையுள்ள மெர்சிடிஸ், ராயல், டிராம்ப், கோத்ரெஜ் போன்ற பல்வேறு நிறுவனங்களின் பழமையான தட்டச்சுக் கருவிகள் உள்ளன.

typewriter museum

இது பற்றிக் கூறும் அருங்காட்சியகத்தின் உரிமையாளர் ராஜேஷ், “நான் இந்த அருங்காட்சியகத்தை பத்து வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தேன். இப்போது என்னிடம் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 450 வகையான தட்டச்சுக் கருவிகள் இருக்கின்றன. என்னிடம் இருப்பதிலேயே மிகவும் பழமையான தட்டச்சுக் கருவி 1890ம் ஆண்டில் தயாரிப்பட்டது. தட்டச்சுப்பொறி தொழில் எங்கள் குடும்பத் தொழிலாக இருந்தது. ஸ்மார்ட்போன்களில் வளர்ந்து வரும் தலைமுறைகள், இப்படியொரு இயந்திரம் ஒரு காலத்தில் இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக நாங்கள் அருங்காட்சியகத்தை தொடங்கினோம்” என்று கூறுகிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.