மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமத்திற்கான வியாபாரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வரலாற்று புனைவு நாவலான ‘பொன்னியின் செல்வன்’ கதையை, அதேப் பெயரில் திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இவரது கனவுப் படமான இந்தத் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. கொரோனா காலக்கட்டத்திலும் 155 நாட்களில் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பையும் நடத்தி ஆச்சரியப்பட வைத்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். இதில் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், ஜெயராம், பிரபு, ரகுமான், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, நிழல்கள் ரவி, சரத்குமார், ஷோபிதா, பிரகாஷ்ராஜ் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பெரும் பொருட்செலவில் லைகா நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸுடன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

image

இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிலையில், இந்தப் படத்தின் ஓடிடி உரிமத்தின் விற்பனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்தப் படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் கைப்பற்றியநிலையில், இரண்டு பாகங்களின் ஓடிடி வெளியீட்டு உரிமம் 125 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் படத்தின் சாட்டிலைட் உரிமம் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமத்தின் வியாபாரமும் நடந்து முடிந்துள்ளதை படக்குழுவினர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.

இந்தப் படத்தின் பட்ஜெட் 500 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. படம் வெளியாவதற்கு ஒருவாரத்திற்கு முன்னதாக ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்வுகள் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக விரைவில் பல்வேறு இடங்களுக்கும் படக்குழுவினர் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.