நடிகர் விக்ரமின் ‘கோப்ரா’ பட ட்ரெயிலர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

‘டிமான்ட்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’. இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார்.. அவருக்கு ஜோடியாக ‘கே.ஜி.எஃப்.’ புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன்மூலம் திரையுலகில் அவர் அறிமுகமாகிறார்.

வெளியானது நடிகர் விக்ரமின் கோப்ரா திரைப்படத்தின் ட்ரைலர்#Vikram | #Cobra | #CobraTrailer | @chiyaan pic.twitter.com/rKmppMgFbq
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) August 25, 2022

அத்துடன், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி, பத்மப்ரியா, ரோஷன் மாத்யூ, கே.எஸ். ரவிக்குமார், பாபு ஆண்டனி, ஷாஜி சென், ரோபோ சங்கர், ஆனந்த்ராஜ், ஜான் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்த இந்தப் படம், முதலில் ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பின்பு போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நிறைவடையாததால், வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

image

இதையடுத்து படத்தை புரமோஷன் செய்யும் பணியில் ஈடுபட்ட படக்குழுவினர், திருச்சி, மதுரை, கோவை என பல ஊர்களுக்கு சென்றனர். இந்தப் புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலாகின. இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் முதல் இரண்டுப் படங்களைப் போன்று இந்தப் படமும் சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ளது. கணித ஆசிரியராக நடிகர் விக்ரம் நடிப்பதாக தெரிகிறது. இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.