பிரபல இயக்குநர்களான புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

படத்திற்கான தொடக்கப்பணிகள் நடைபெற்று வருவதாக இயக்குநர் புஷ்கர் கூறியதாக தெரிகிறது. எனவே இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் தற்போது AK 61- படத்தில் பிஸியாக உள்ளதால், அப்படத்திற்கு பின் ’விக்ரம் வேதா’ கூட்டணியுடன் அஜித் படம் குறித்து மேற்கொண்டு தகவல்கள் வெளிவரக்கூடும். தற்போது அஜித் நடித்துவரும் AK 61 படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கி வருகின்றார்.

image

வலிமை படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் அப்படத்திற்கான முதல் கட்ட வேலைகள் இப்போது நடைபெற்று வருகின்றன. இதற்கு அடுத்த படமாக விக்னேஷ் சிவனுடனான படத்தில், நடிக்கிறார் அஜித். அதில் அஜித் ஜோடியாக நயன்தாரா நாயகியாக நடிக்க உள்ளார். அப்படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா அந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளது. அதற்கு பிறகே அவர் புஷ்கர்-காயத்ரி படத்தில் நடிக்கக்கூடும் என்பதே தற்போதைய தகவல்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.