சாய் பல்லவி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘கார்கி’ படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நிவின் பாலி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘ரிச்சி’ படத்தைத் தொடர்ந்து, கௌதம் ராமச்சந்திரன் எழுதி இயக்கி தயாரித்திருந்தப் படம் ‘கார்கி’. கதைக்கும், நடிப்புக்கும் மிகவும் முக்கியத்துவம் தரும் சாய்பல்லவி, இந்தப் படத்தில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காளி வெங்கட், லிவிங்ஸ்டன், ஆர்.எஸ். சிவாஜி, ஜெயப் பிரகாஷ், ஐஸ்வர்யா லக்ஷமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட், பரம்வாஹ் ஸ்டூடியோவுடன் இணைந்து கடந்த மாதம் 15-ம் தேதி வெளியிட்டு இருந்தது.

image

விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த இந்தப் படம், சாய் பல்லவியின் முக்கிய படங்களில் ஒன்றாகும். இந்நிலையில், இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சோனி லைவ் ஓ.டி.டி. தளத்தில் வருகிற ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் வெளியாகிறது. இந்தப் படத்தின் சேட்டிலைட் உரிமையை ஏற்கெனவே கலைஞர் டிவி கைப்பற்றியுள்ளது.


Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.