திரை உலகை நேசிக்கும் கலைஞர்களுக்கு விருதுகள் ஒரு பெரிய விஷயம் இல்லையென்றாலும், அவர்களை மேலும் ஊக்குவிக்கவும், கௌவரப்படுத்தவும் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அவ்வாறு இந்தியாவில் மத்திய அரசின் செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அமைப்பான திரைப்பட விழாக்களின் இயக்ககம், ஆண்டுதோறும் நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு மொழிகளில் வெளியாகும் படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு தேசிய விருதினை அறிவிக்கும். நமது நாட்டில் பல ஆண்டுகள் திரைத்துறையில் சேவை புரிந்த கலைஞர்களுக்கு ’தாதா சாகேப் பால்கே’ விருது வழங்கப்படுகிறது. அதற்கு அடுத்தப்படியாக உயர்ந்த விருதாக தேசிய விருதுகளே உள்ளன. என்னதான் படம் வசூல்ரீதியாக வெற்றிப்பெற்றாலும், இந்த விருதைப் பெறுவது என்பதே கலைஞர்களுக்கு ஒரு தனி கௌரவமாகவே பார்க்கப்படுகிறது.

image

அதன்படி, கடந்த 2020-ம் ஆண்டில் வெளியான படங்களில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானப் படங்கள் விருதுகளை தட்டிச் சென்றுள்ளன. இதில் மிகவும் எதிர்பார்க்கக்கூடிய ஒரு விருது என்றால் அது சிறந்த நடிகருக்கான விருதே ஆகும். அந்த வகையில், 2020-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருது ‘சூரரைப் போற்று’ படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கும், ‘Tanhaji: The Unsung Hero’ படத்திற்காக அஜய் தேவ்கானுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

image

அஜய் தேவ்கான் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெறுவது இது ஒன்றும் முதல் முறையல்ல. சொல்லப்போனால் 3-வது முறையாக இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தந்தை பாலிவுட்டில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டராகவும், தாயார் தயாரிப்பாளராகவும் இருந்த குடும்பத்தில் பிறந்தவர்தான் அஜய் தேவ்கான். பாலிவுட்டில் கடந்த 1991-ம் ஆண்டு ‘Phool Aur Kaante’ படம் மூலம் அறிமுகமான அஜய் தேவ்கான், திரையுலகில் அறிமுகமான 7 வருடங்களிலேயே தனது முதல் தேசிய விருதை தட்டிச் சென்றுள்ளார். தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களை ஈர்த்த அவர், கடந்த 1998-ம் ஆண்டு வெளியான ‘Zakhm’ என்றப் படத்திற்காக தனது தேசிய விருதை பெற்றார். அப்போது ‘டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்’ படத்தில் அம்பேத்கராக நடித்த மம்முட்டியுடன் சிறந்த நடிகருக்கான விருதை பகிர்ந்துக் கொண்டார்.

image

அதன்பிறகு, மீண்டும் 2002-ம் ஆண்டிலேயே ‘The Legend of Bhagat Singh’ படத்தில் பகத் சிங்காக நடித்து பெயர் பெற்றார். இந்தப் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இரண்டாவது முறையாக தட்டிச் சென்றார். இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது 3-வது முறையாக ‘Tanhaji: The Unsung Warrior’ சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார் அஜய் தேவ்கான்.

சிறந்த நடிகருக்கான விருதை அதிக முறை வென்றவர்களில் 4 முறை வென்று அமிதாப் பச்சன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்ததாக, நடிகர் கமல்ஹாசனும், மம்முட்டியும் 3 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை வென்றுள்ளனர். இந்த வரிசையில் தற்போது அஜய் தேவ்கானும் இணைந்துள்ளார். நடிப்பு அசுரானாக விளங்கி வரும் அஜய் தேவ்கான், இந்த விருது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் படக்குழுவினருக்கு மட்டுமின்றி தனது பெற்றோருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.


Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.