விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தில் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘பீஸ்ட்’ திரைப்படத்திற்குப் பிறகு, தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வாரிசு’. இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். தமன் இசையமைக்கும் இந்தப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கிறார். இந்தப் படத்தில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

image

இந்தப்படம் நடிகர் விஜயின் ‘பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’ போன்று குடும்ப பின்னணிப் படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்தப் படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பூ, ஜெயசுதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தப் படத்தில் நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘குஷி’ படத்தில் விஜயை இயக்கியிருந்த எஸ். ஜே. சூர்யா, அதன்பிறகு விஜயின் ‘நண்பன்’, ‘மெர்சல்’ படங்களில் முக்கிய கதாபாத்திரத்திரல் நடித்திருந்தார். இந்தப் படத்தில் நடிப்பதன் மூலம், தற்போது 3-வது முறையாக எஸ். ஜே. சூர்யா – விஜய் கூட்டணி அமைய உள்ளதாக கூறப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.