‘தளபதி 67’ படத்தில் லோகேஷ் கனராஜுடன், இயக்குநர் ரத்னகுமார் மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த மாதம் 3-ம் தேதி வெளியாகி ஏகோபித்த வரவேற்பை பெற்ற படம் ‘விக்ரம்’. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஜயின் ‘தளபதி 67’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ படம் முடிவடைந்ததும், லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிகர் விஜய் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது.

image

இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ ஆகிய படங்களுக்கு வசனம் மற்றும் திரைக்கதை எழுதிய இயக்குநர் ரத்னகுமார், ‘தளபதி 67’ படத்திலும் திரைக்கதை எழுதவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் வைபவ்வின் ‘மேயாத மான்‘, அமலா பால் நடித்த ‘ஆடை‘ போன்ற படங்களை இயக்கியுள்ள ரத்னகுமார், தற்போது நடிகர் சந்தானத்தின் ‘குலு குலு’ படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் மீண்டும் லோகேஷ் கனகராஜுடன், இயக்குநர் ரத்னகுமார் இணையவுள்ளது விஜய் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.