சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்படும் ரிசார்ட்களை மூடக்கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த ஒலி விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனர் கற்பகம் தாக்கல் செய்த மனுவில், 1,411 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் 47 சட்டவிரோத ரிசார்ட்கள் செயல்படுகின்றன என தகவல் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தேசிய வன விலங்குகள் வாரியம், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் செயல்படும் இந்த சட்டவிரோத ரிசார்ட்கள் காரணமாக, மலைப்பகுதி சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

image

வனப்பகுதிகளை பாதுகாக்க வேண்டுமானால், காளான் போல பரவிவரும் சட்டவிரோத ரிசார்ட்களை அப்புறப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ள மனுதாரர், இந்த ரிசார்ட்களை மூடும்படி உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் முகமது சபிக் அடங்கிய அமர்வு, தமிழக வனத்துறை, தேசிய வனவிலங்குகள் பாதுகாப்பு வாரியம், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் ஆகியன பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.