ஆதி – நிக்கி கல்ராணி திருமண வரவேற்பில் கலந்துகொண்டு வாழ்த்தியுள்ளனர் இசைஞானி இளையராஜா, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட திரை பிரபலங்கள்.

நடிகர் ஆதியும் நிக்கி கல்ராணியும் ‘மரகத நாணயம்’, ‘யாகாவாராயினும் நா காக்க’ ஆகிய இரண்டுப் படங்களில் இணைந்து நடித்திருந்தனர். அப்போதே ஆதியின் ‘டார்லிங்’ ஆனார் நிக்கி கல்ராணி. இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி தங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக நிக்கி கல்ராணி மற்றும் ஆதி, தங்களது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்தனர். இவர்களின் திருமணத்தையொட்டி, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹைதராபாத்தில் ‘ஏ.கே.61’ படப்பிடிப்பில் நடிகர் அஜித்தை நேரடியாக சந்தித்து நடிகர் ஆதி திருமண அழைப்பிதழை கொடுத்திருந்தார்.

image

image

image

image

இதனைத் தொடர்ந்து இவர்களின் திருமணம் கடந்த மே 18-ஆம் தேதி சென்னையில் பிரபல ஓட்டல் ஒன்றில் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அதில், தெலுங்கு நடிகர்கள் நானி, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடனமாடிய வீடியோவும் வைரலானது.

image

மேலும், விழாவில் தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்கள் பலர் பங்கேற்றனர். இந்த நிலையில், நேற்று திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில், இளையராஜா, ராதிகா சரத்குமார், நடிகர் சசிக்குமார், ஜீவா, நாசர் உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டு இருவரையும் வாழ்த்தினர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.