’நெஞ்சுக்கு நீதி’ படம் சமூக நீதி பேசும் என்று கூறியுள்ளார் நடிகர் உதயநிதி ஸ்டாலின்.

‘ஆர்டிகிள் 15’ ரீமேக்கான ‘நெஞ்சுக்கு நீதி’ உதயநிதி நடிப்பில் வரும் 20 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். உதயநிதியுடன் ஆரி, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி, அப்துல் லீ, ராட்சசன் சரவணன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். நேற்று நடந்த இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், நடிகர் சிவகார்த்திகேயன், யுகபாரதி,மகிழ் திருமேனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதில் பேசிய உதயநிதி ஸ்டாலின் ‘நெஞ்சுக்கு நீதி’ சமூக நீதி பேசும் என்று கூறியுள்ளார். முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது, 

“உதயநிதி சார் பல வேலைகளை பார்க்கிறார். அது அவரது குடும்ப ரத்ததிலேயே இருக்கிறது. உண்மையான டான் உதயநிதி சார் தான். இத்தனை வருட பழக்கத்தில் அவர் எனக்கு பாசிடிவிட்டியை மட்டுமே தந்துள்ளார். ’நெஞ்சுக்கு நீதி’ பவர்வுல் டைட்டில். எனக்கு ரீமேக் எடுக்க பயம். ஆனால், அருண்ராஜா இப்படத்தை சிறப்பாக உருவாக்கியுள்ளார். அருண்ராஜா எனது நண்பன் என்பது பெருமை. ’கனா’ போன்ற படத்தை எடுத்து பெரிய வெற்றியை கொடுத்துள்ளார். அருண் பெரிய இழப்பில் இருந்த போது அவனுக்கு உறுதுணையாக இருந்தது உதயநிதி சார் தான். இந்த ‘நெஞ்சுக்கு நீதி’ பெரிய வெற்றியடையும்” என்று பேசினார். அவரத்தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின்,

image

”முதல் நன்றி தாத்தா கலைஞருக்கு. அவர் தந்தது தான் இந்த டைட்டில். படத்தின் டைட்டிலுக்கு நியாயம் செய்ய முயற்சித்து இருக்கிறோம். போனிகபூர் என்னை அழைத்து ரீமேக் பண்ணலாம் என்று கூறியபோது, இப்படத்திற்கு யாரை இயக்குநராக வைத்து பண்ணலாம் என சந்தேகம் இருந்தது. யாரும் முன்வரவில்லை. ’கனா’ படத்தை பார்த்துவிட்டு, அருணை கூப்பிட்ட போது, அருண் ஒத்துகொண்டார். நான் ’நெஞ்சுக்கு நீதி’ டைட்டில் உரிமை பற்றி, அப்பாவிடம் கேட்டபோது, ’பார்த்து பண்ணுங்க’ என்றார். ஆனால், படம் எடுக்கும் போது, கொரோனா பெரிய தடையாக இருந்தது. அருண் மனைவி மற்றும் படத்தில் பணியாற்றி கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு இந்த படத்தின் வெற்றி சமர்பணம். அருண் தமிழ் சினிமாவில் பெரிய இடத்திற்கு செல்வார். நடன இயக்குனர், கலை இயக்குனர், ஒளிப்பதிவாளர் தினேஷ் அவர்களுக்கும் நன்றி. இந்தப்படம் ஒத்துகொண்ட போது, எப்படி போலீஸாக நடிக்க போகிறேன் என்ற பயம் இருந்தது. நான் போலீஸாக திரையில் சிறப்பாக வந்ததற்கு பெரிய காரணம் தினேஷ்தான். படம் சமூகநீதி பேசும். இந்த சமயத்தில் தேவையான ஒரு படம், உங்களுக்கு நிச்சயம் பிடிக்கு” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.