நடிகர் அஜித்தின் ‘ஏ.கே. 61’ படத்தில் பிரபல மலையாள நடிகையான மஞ்சு வாரியர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக ஹெச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வலிமை’. கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இந்தப் படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து 3-வது முறையாக இந்தக் கூட்டணி இணைந்தது. அதன்படி, அஜித்தின் 61-வது படத்தை ஹெச் வினோத் இயக்கி வருகிறார்.

நடிகர் அஜித் இந்தப் படத்தில் இரட்டை கதாபாத்திரங்களில், நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்தப்படத்தின் கதைக்களம் வங்கி கொள்ளையை சுற்றி அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ‘ஏ.கே. 61’ படத்திற்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் சென்னை மவுண்ட் ரோடு போன்ற பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு, கடந்த மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

image

இந்தப்படத்தில் பாலிவுட் நடிகை தபு நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘ஏ.கே. 61’ படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகையான மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘அசுரன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக, மஞ்சு வாரியர் நடித்திருந்தார். இந்நிலையில், ‘ஏ.கே. 61’ படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

image

இந்தப் படத்தில் ஒரு புதிய காம்போவை விரும்பிய இயக்குநர் ஹெச் வினோத், அஜித்திற்கு நடிகை மஞ்சு வாரியர் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் படக்குழு மஞ்சு வாரியரை அணுகியுள்ளது. இதையடுத்து அவர், சமீபத்தில் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், படப்பிடிப்பில் மஞ்சு வாரியர் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.