தண்ணீர் இல்லாத தரிசுநிலத்தை அடுத்த தலைமுறைக்கு கொடுக்கக் கூடாது என்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.

ஹரியானா மாநிலத்தில் 75 நீர்நிலைகளை மேம்படுத்தி புத்துயிர் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட அமிர்த சரோவர் திட்டத்தை தொடங்கிவைத்து பேசிய அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், “ஆரோக்கியமான நிலத்தின் அடிப்படை நீர்தான். நமது அடுத்த தலைமுறைக்கு தண்ணீர் இல்லாத தரிசு நிலத்தை கொடுக்கக்கூடாது. எனவே, ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் சேமித்து பயன்படுத்தவேண்டும்” என்று கூறினார்.

Public Namaz Won't be Tolerated, Says Haryana CM, Suspends Prayer Services  in Open Spaces - RobetNews

மேலும், “எங்கள் அரசாங்கம் 4,000 க்கும் மேற்பட்ட ரீசார்ஜ் போர்வெல்களை அமைக்க திட்டமிட்டுள்ளது, இதுவரை 750 போர்வெல்கள் அமைக்கப்பட்டுள்ளன. தண்ணீர் வீணாவதைத் தடுக்க, நகரங்களில் குடிநீருக்கு ஒரு பைப் லைன், துணி துவைக்கவும், தோட்ட பயன்பாட்டுக்கும் இன்னொரு பைப் லைன் என இரண்டு பைப்லைன்களை வழங்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

ஹரியானா மாநிலம் சோனேபாட்டின் நஹ்ரா கிராமத்தில் இருந்து அமிர்த சரோவர் திட்டத்தைத் தொடங்கி வைத்த கட்டார் தனது அரசு  ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் 1,600 குளங்கள் புதுப்பிக்கவுள்ளது என்றும், ஹரியானாவில் 8,000 நீர்நிலைகளை மேம்படுத்தி புத்துயிர் பெற இலக்கு வைத்திருப்பதாகவும் கூறினார்

Manohar Lal Khattar lashes out: 'If you cannot manage Delhi, give it to  Haryana' | Dellhi New

தொடர்ந்து பேசிய அவர், ஹரியானா மாநிலத்தில் நிலவும் மின் நெருக்கடிக்கு அடுத்த 10 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்றார். ” ஹரியானாவில் கடந்த ஆண்டை விட மின் தேவை 50% அதிகரித்துள்ளது, இதில் 30% மாநில அரசால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அதிக மின் தேவை காரணமாக, இரவு நேரங்களில் தொழில்துறையினர் தங்கள் செயல்பாட்டை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்” என்று கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.