உலக சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துள்ள ‘அவதார் 2’ திரைப்படத்தின் ரீலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளநிலையில், படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, இன்று CinemaCon நிகழ்ச்சியில் வெளியிடப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘தி டெர்மினேட்டர்’, ‘ஏலியன்ஸ்’, ‘டைட்டானிக்’ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், கடந்த 2009-ம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியானப் படம் ‘அவதார்’. வரலாற்று சயின்ஸ் பிக்ஷனாக உருவான இந்தப் படம், சினிமா உலகை, அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றது மட்டுமல்லாமல், வசூல்ரீதியாக சாதனை படைத்தது.

இதையடுத்து இந்தப் படத்தின் சீக்குவல் எனப்படும், அடுத்தடுத்த பாகங்கள், குறிப்பிட்ட இடைவெளியில் வெளியாகும் என்று இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கூறியிருந்தார். அத்துடன், ‘அவதார் 2’ படத்திற்கான படப்பிடிப்பை தொடங்கியநிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

image

அதன்படி வருகிற டிசம்பர் மாதம் 16-ம் தேதி இந்தப் படம் டால்பி பிரீமியம் 4k உடன், 3D தொழில்நுட்பத்தில், உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாக உள்ளது. இதையடுத்து படத்திற்கான ட்ரெயிலர் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளநிலையில், மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. அந்தவகையில் தற்போது லாஸ்வேகாஸில் சீஸர்ஸ் பேலஸ் எனும் இடத்தில், CinemaCon நிகழ்ச்சி கடந்த 25-ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த விழாவில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரபல இயக்குநர்கள், நடிகர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் சிறப்பு அழைபபின் பேரில் கலந்து கொள்வர். குறிப்பாக தேசிய திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில், மிகப்பெரிய  மாநாடாக இந்த நிகழ்ச்சி அமைந்து இருக்கும். கடந்த 10 ஆண்டுகளாக, வருடந்தோறும் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில், அதி பிரம்மாண்டமான, அதிநவீன திரையரங்கில் ஹாலிவுட் படங்களின் பிரத்யேக காட்சிகள், வரவிருக்கும் படங்களின் ட்ரெயிலர், கிளிம்ப்ஸ் காட்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

image

வரும் 28-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவின் முதல் நாளில், பிராட் பிட்டின் ‘புல்லட் ட்ரெயின்’, ‘ஸ்பைடர் மேன் (Spider-Man: Across The Spider-Verse)‘, ‘பார்பி‘, ’வோங்கா‘ உள்ளிட்ட படங்களின் 15 நிமிட கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து ‘அவதார் 2’ திரைப்படத்தின் 15 முதல் 20 நிமிட கிளிம்ப்ஸ் காட்சி இன்று திரையிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், மே 6-ம் தேதி ‘அவதார் 2’ படத்தின் ட்ரெய்லர், மார்வல் ஸ்டூடியோஸின் ‘டாக்டர் ஸ்ட்ரேன்ஜ் இன் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ்’ படத்துடன் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் ‘அவதார் 2’ படத்தை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.