நடிகர் விஜயின் ‘பீஸ்ட்’ திரைப்படம் அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘மாஸ்டர்’ வெற்றி திரைப்படத்திற்கு நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘பீஸ்ட்’. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

அனிருத் இசையமைப்பில், இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி, யூ-ட்யூப்பில் சாதனைகளை புரிந்தநிலையில், டீசர் மற்றும் ட்ரெயிலரும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் இந்தப் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியநிலையில், கடந்த 13-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. விஜய்யின் முதல் பான் இந்தியா ரிலீஸாக ‘பீஸ்ட்’ படம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.

ஆனால் படம் வெளியானது முதல் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. எதிர்மறையான வெளியாகி வந்தபோதும், கடந்த 5 நாட்களில் 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை புரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 14-ம் தேதி வெளியான நடிகர் யாஷின் ‘கே.ஜி.எஃப். 2’ படம் மாபெரும் வரவேற்பால், ‘பீஸ்ட்’ திரைப்படத்திற்கான காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

image

ஆனால் விஜயின் ரசிகர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். ‘கே.ஜி.எஃப். 2’ பட வருகையால், ‘பீஸ்ட்’ பட வசூல் பாதிப்பில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், ‘பீஸ்ட்’ திரைப்படம் மே 11-ம் தேதி ஓ.டி.டி.யில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்படம் நெட்ஃபிளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

கடந்த வருடம் 50 சதவிகித பார்வையாளர்கள் அனுமதியுடன் திரையரங்குகளில் வெளியான நடிகர் விஜயின் முந்தைய படமான ‘மாஸ்டர்’, அமேசான் ப்ரைம் ஓடிடியில் படம் வெளியான 3 வாரங்களிலேயே ரிலீஸ் ஆனது. ஆனால் ‘பீஸ்ட்’ படம், திரையரங்குகளில் வெளியான 4 வாரங்கள் கழித்து வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.