தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் நாரயண் தாஸ் நாரங் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது இறப்பு தெலுங்கு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 76.

ஏசியன் நிறுவன குழுமத்தின் சேர்மனான நாராயண் தாஸ் நாரங், கடந்த 1980 முதல், சுமார் 650 படங்களுக்கும் மேலாக ஃபைனான்சியராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள பிரபல மல்டிபிளெக்ஸ் தியேட்டரின் சேர்மனாக பதவி வகித்துவந்த அவர், தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையின் தலைவராகவும் இருந்துள்ளார்.

image

குறிப்பாக, அண்மையில் நாகசைதன்யா, சாய்பல்லவி நடிப்பில் வெளியான ‘லவ் ஸ்டோரி’, நாக சௌர்யாவின் ‘லக்ஷயா’ஆகிய படங்களையும் இவர் தயாரித்திருந்தார். மேலும், நாகர்ஜுனா, காஜல் அகர்வால் நடிப்பில் ‘தி கோஸ்ட்’, இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் ‘தனுஷ் 46’, அனுதீப் இயக்கத்தில், சிவகார்த்திகேயனின் ‘எஸ்.கே. 20’ ஆகிய படங்கள் உள்பட பல படங்களை தயாரித்து வந்தார்.

image

இந்நிலையில், வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்த அவர், ஹைதராபாத்தில் உள்ள ஸ்டார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிசிக்சை பலனின்றி இன்று காலமானார். அவரின் மறைவையொட்டி, பிரபல தெலுங்கு நடிகர்களான சிரஞ்சீவி, மகேஷ் பாபு, சுதீப், நாக சௌர்யா, சிவகார்த்திகேயன் உள்பட தென்னிந்திய திரைப்பட பிரபலங்கள், தங்களது சமூகவலைத்தள பக்கங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.